/* */

திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு

திருவண்ணாமலையில் சிக்னலில் நிற்கும் பொது மக்கள் வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக சாலையில் பெரிய அளவில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு
X

திருவண்ணாமலையில் அமைக்கப்பட்ட பசுமை பந்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில், வரலாறு காணாத கோடை வெயில் சுட்டெரிக்கிறது. அதிகபட்சமாக நேற்றும் 108 டிகிரி வெயில் பதிவானது. மேலும், பகலில் சாலைகளில் நடந்து செல்ல முடியாதபடி வெப்பக்காற்று வீசியது. அதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் தவித்து வருகின்றனர்.

கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் சாலைகளில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் திருவண்ணாமலையில் கோடை வெயில் 108 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கின்றது.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், பெரியார் சிலை, மற்றும் போக்குவரத்து சிக்னல்கள் உள்ள இடங்களில் நீண்ட நேரமாக வாகனங்கள் காத்திருந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

அப்பகுதியில் வாகனங்கள் நீண்ட நேரமாக நிற்பதால் வாகன ஓட்டிகள் அனல் காற்று வீசும் நிலையில் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் நீண்ட நேரம் சிக்னலில் நிற்கும் பொது மக்கள் வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக சாலையின் மேல் பகுதியில் பெரிய அளவில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பசுமை பந்தல் கடும் வெயிலில் சமாளிப்பதற்கு உதவியாக உள்ளதாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Updated On: 8 May 2024 6:16 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  2. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  3. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  4. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  9. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  10. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்