/* */

போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ்குமார் இன்று போக்குவரத்து காவலர்களுக்கு நீர் மோர் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
X

 போக்குவரத்து காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நீர்மோர் வழங்கினார்.

தென்காசி மாவட்டத்தில் கொளுத்தும் கோடை வெயிலால், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட காவலர்களுக்கு நீர் மோர் மற்றும் லெமன் ஜூஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக கடுமையான வெப்ப அலை வீசி வரும் நிலையில், வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கொளுத்தும் வெயிலில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் தங்களது கடமைகளை செய்து வரும் நிலையில், வெயிலின் தாக்கத்தின் காரணமாக காவலர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், சாலைகளில் வெப்ப அலையானது கடுமையாக வீசி வருகிறது.

இந்த நிலையில், கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாது கொழுத்தும் வெயிலில் தங்களது கடமைகளை செய்து போக்குவரத்தை சீர் செய்து வரும் காவலர்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காக அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை நீர் மோர் மற்றும் லெமன் ஜூஸ் உள்ளிட்டவைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், இன்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ்குமார் இன்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர்களுக்கு நீர் மோர் வழங்கி இந்த பணியை தொடங்கி வைத்த நிலையில், வெயில் காலம் முடிவடையும் வரை நாள்தோறும் இரண்டு வேளைகள் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவலர்களுக்கு நீர் மோர் மற்றும் லெமன் ஜூஸ் வழங்க தென்காசி மாவட்டம் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 April 2024 12:53 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  3. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  4. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  5. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  10. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...