/* */

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததால், அணையின் நீர் மட்டம் 53.98 அடியாக சரிந்துள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
X
மேட்டூர் அணை.

மேட்டூர் அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததால், அணையின் நீர் மட்டம் 53.98 அடியாக சரிந்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 300 கன அடியாக உள்ளது.

இந்நிலையில்,மேட்டூர் அணைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 57 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 70 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 54.15 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 53.98 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 20.41 டிஎம்சியாக உள்ளது.

Updated On: 27 April 2024 4:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  2. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  3. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  4. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  5. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  6. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  7. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து
  8. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  9. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  10. காஞ்சிபுரம்
    இருசக்கர வாகனத் திருட்டு: ஆட்டோ டிரைவர் கைது