/* */

களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின் குடும்பத்துடன் சந்திப்பு

Namakkal news- களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுக்கு பின் குடும்பத்துடன் சந்தித்தனர்.

HIGHLIGHTS

களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின் குடும்பத்துடன் சந்திப்பு
X

Namakkal news- களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்குப்பின், குடும்பத்துடன் சந்தித்துக்கொண்டனர். அப்போது குழு புகைப்படம் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

Namakkal news, Namakkal news today- நாமக்கல், களங்காணி ஆதி திராவிடர் நலத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவ மாணவியர் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டம், களங்காணியில், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், 1998-99ம் கல்வி ஆண்டில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான முன்னாள் மாணவ மாணவிகள் 25 ஆண்டுகளுக்குப்பின் தாங்கள் படித்த பள்ளிக்கு வந்து சந்தித்துக்கொண்டனர். அப்போது ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து, தாங்கள் படித்த காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். மேலும், தங்கள் குடும்ப உறுப்பினர்கள், அவர்கள் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்களில் பலர் தற்போது, தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களாகவும், மத்திய வேளாண் துறை ஆராய்ச்சி கழகத்தில் ஆராய்ச்சியாளர்களாகவும், பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவங்களில் பேராசிரியர்கள், ஆசிரியர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும், சாஃப்ட்வேர் மற்றும் பல்வேறு துறைகளில் இன்ஜினியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

மேலும், பலர், சுயதொழில் தொடங்கி பல்வேறு பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் மாணவ, மாணவியர், தங்கள் முன்னேற்றத்தில் களங்காணி அரசு மேல்நிலைப் பள்ளி பெரும் பங்கு வகித்ததை பெருமையுடன் பகிர்ந்து கொண்டனர். பின்னர் அனைவரும் செல்ஃபி மற்றும் குடும்பத்துடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Updated On: 5 May 2024 6:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!