/* */

வாடிப்பட்டியில் காட்டெருமைகள் சுற்றித்திரிவதால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அச்சம்

மலையடிவார கிராமத்தில் இறங்கும் வனவிலங்குகள் மழையை ஒட்டி பயிர் செய்யப்பட்டிருக்கும் பயிர்களை உணவுக்காக அழித்து விவசாயிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

வாடிப்பட்டியில் காட்டெருமைகள் சுற்றித்திரிவதால்  அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள்  அச்சம்
X

வாடிப்பட்டியில் காட்டெருமைகள் சுற்றித்திரிவதால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வடபுறத்தில் பரந்து விரிந்திருக்கும் சிறுமலையில் பலதரப்பட்ட அபூர்வ மூலிகைகள் இருப்பதால் சிறு மலைக்கு மூலிகை மலை என்ற பெயரும் உண்டு. இங்கு காபி ஏலக்காய் மிளகு போன்ற பயிர்களும் பழங்கள், காய்கறிகளும் பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் அழகே உருவானது இந்த சிறுமலை.

இந்த, சிறுமலையில் ஆபத்தை உருவாக்கும் வனவிலங்குகளும் பெருமளவில் உள்ளன. மேலே, உள்ள தோட்டங்களில் ஆட்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் வனவிலங்குகள் உணவுக்காகவும், குடிநீருக்காகவும், அடிக்கடி மலையிலிருந்து கீழே இறங்கி வருவது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.

இதுபோன்று, மலையடிவார கிராமத்தில் இறங்கும் வனவிலங்குகள் மழையை ஒட்டி பயிர் செய்யப்பட்டிருக்கும் பயிர்களை உணவுக்காக அழித்து விவசாயிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை வாடிப்பட்டி அருகே உள்ள பழனி ஆண்டவர் கோயில், சிறுமலை அடிவாரத்தில் காட்டெருமைகள் கூட்டமாக இறங்கி, அங்கே பயிரிடப்பட்டிருக்கும் விளைநிலங்களில் புகுந்தன . இதனால், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை கருத்தில் கொண்டு வனத்துறையினர் வனவிலங்குகளை மலையில் இருந்து தரை இறங்க விடாமல் தடுத்து விவசாயத்தை பாதுகாத்து தரவேண்டும் என மலையடிவாரத்தைச் சார்ந்த கிராம மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 23 July 2021 5:52 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?