/* */

ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமரா பழுது

Erode news- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமரா பழுது
X

Erode news- சிசிடிவி கேமரா பழுதான நிலையில் அதிகாலையில் வேறு கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Erode news, Erode news today- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில் 70.5 சதவீத வாக்குகள் பதிவானது. இதைத்தொடர்ந்து, குமாரபாளையம் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையமான சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.

இதன், பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் ஸ்ட்ராங் ரூம் என்றழைப்படும் இருப்பறைக்கு கொண்டு செல்லப்பட்டு ஏற்கெனவே திட்டமிடப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு தேர்தல் அதிகாரிகள் முன் சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அரசியல் கட்சி சார்பாக முகவர்கள் அங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இங்கு, 220க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் தங்கி இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை டிவி மூலம் பார்வையிட்டு கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறைக்கு, வெளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா நேற்று நள்ளிரவு 11.30 மணியவில் பழுதானது. அதனைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் இன்று அதிகாலை 3.30 மணியில் இருந்து புதிய சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர். ஐபி முகவரியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் சிசிடிவி கேமரா பாதிக்கப்பட்டதாக ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 29 April 2024 3:54 AM GMT

Related News