/* */

சென்னிமலையில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை மாநில உயர் அதிகாரி ஆய்வு

சென்னிமலை ஊராட்சி பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை சென்னை நகராட்சி நிர்வாக கூடுதல் செயலாளர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

சென்னிமலையில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை மாநில உயர் அதிகாரி ஆய்வு
X

சென்னிமலை ஊராட்சி பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்த சென்னை நகராட்சி நிர்வாக கூடுதல் செயலாளர் மகேஸ்வரி ரவிக்குமார்.

சென்னிமலை ஊராட்சி பகுதிகளில் ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட பணிகளை சென்னை நகராட்சி நிர்வாக கூடுதல் செயலாளர் ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 22 கிராம ஊராட்சிகளில் உள்ள 434 ஊரக குடியிருப்புகளுக்கான திட்டப்பணிகளை கூடுதல் செயலாளர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார். இத்திட்டத்திற்கான நீர் சேகரிப்பு கிணறு மற்றும் தலைமை நீருந்து நிலையம் ஸ்ரீ பெரிய சாமுண்டீஸ்வரி கோவில், முத்து கவுண்டன் பாளையத்தில் உள்ள காவேரி ஆற்றில் அமைக்கப்பட்டதை பார்வையிட்டார்.

இவ்விடத்திலிருந்து, கடந்த ஜனவரி 31ம் தேதி அன்று முதல் சோதனை ஓட்டப் பணிகள் ஜெனரேட்டர் மூலம் துவங்கப்பட்டதையும் ஆய்வு செய்தார். மேலும் இவ்விடத்தில் மின்சார வாரியத்திடமிருந்து உயர் மின் அழுத்த இணைப்பை விரைவில் பெற்று திட்டமிட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே அதாவது ஜூன் 1க்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து , வெள்ள முத்து கவுண்டன் வலசில் அமைக்கப்பட்டுள்ள 12.11 எம்எல்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தார். தலைமை நீருந்து நிலையத்திலிருந்து 21.70 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கள்ளகவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ள இடைநிலை நீருந்து நிலையம் (ஐபிஎஸ்) வழியாக ஜெனரேட்டர் மூலம் நீர் ஏற்றப்பட்டதையும் ஆய்வு செய்தார்.


அதன் பின்னர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்த நீரூந்து நிலையத்தில் இருந்து ஜெனரேட்டர் மூலம் பனியம்பள்ளி நீரூந்து நிலையம் மற்றும் 6 கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டிகளுக்கு சோதனை ஓட்ட பணிகளை ஆய்வு செய்து இதர தரைமட்ட நீர் தேக்க தொட்டிகளுக்கும் விரைந்து சோதனை ஓட்டப் பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, கருக்கன் காட்டு வலசு, வடமுகம் வெள்ளோடு கிராம ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, வெள்ள முத்து கவுண்டன் வலசு, குமாரவலசு கிராம ஊராட்சிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சின்ன பிடாரியூர், ஒட்டப்பாறை கிராம ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட 1.4 லட்சம் லிட்டர் கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, 1010 காலனி, முகாசி பிடாரியூர் கிராம ஊராட்சிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 3.3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

பின்னர் மின்சார வாரியத்திடம் இருந்து இத்திட்டத்திற்கான புதிய மின் இணைப்புகளை விரைவில் பெற்று ஜூன் 1ம் தேதி முதல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு வழங்கும் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இத்திட்டப் பணிகள் ஆனது கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது,

இப்பணிகளை செப்டம்பர் 2024 இல் முடிக்கும் படி திட்டமிடப்பட்டது. தற்பொழுது இத்திட்டமானது 82 சதவீதம் பணிகள் முடிவுற்று சோதனை ஓட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது திட்டமிட்ட காலகெடுவுக்கு முன்னதாகவே முடிவுற்று ஜூன் 1ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சீனிவாசன், மண்டல தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மேற்பார்வை பொறியாளர்கள் சிவக்குமார், விநாயகம், நிர்வாகப் பொறியாளர்கள் ரேவதி, குருசாமி, உதவி நிர்வாக பொறியாளர் பிரியதர்ஷினி, உதவி பொறியாளர்கள் விவேகானந்தன், சண்முகம் இளைநிலை பொறியாளர்கள் மற்றும் திட்ட மேலாளர்கள் குப்புசாமி, சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 9 May 2024 11:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  3. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  5. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  6. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  7. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  8. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  9. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி