/* */

இலவச வேட்டி, சேலை உற்பத்தியை ஜூன் மாதம் தொடங்க கோரிக்கை..!

தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தியை ஜூன் மாதம் தொடங்க விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

இலவச வேட்டி, சேலை உற்பத்தியை ஜூன் மாதம் தொடங்க கோரிக்கை..!
X

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ்.

தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தியை ஜூன் மாதம் தொடங்க விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலவச வேட்டி, சேலை உற்பத்தியை ஜூன் மாதம் தொடங்க கோரி தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சுரேஷ், நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர்களுடன் திரண்டு வந்து ஈரோடு கைத்தறித்துறை உதவி இயக்குனரிடம் கோரிக்கை மனு அளித்தார்.


பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பிரதானமாக உள்ளது நெசவுத் தொழிலாகும். இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், தமிழக அரசு விலையில்லா வேட்டி சேலை, பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை போன்ற திட்டங்களை 228 விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 67,000 விசைத்தறிகள் மூலமாக அமுல்படுத்தி பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது.

இந்தத் திட்டமானது ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கி டிசம்பர் மாதத்தில் நிறைவு பெற்று தைப்பொங்கல் தினத்தன்று பொதுமக்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், உக்கரைன் போர் மற்றும் உலக பொருளதார பிரச்சனை காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் இலவச வேட்டி சேலை இலவச சீருடை திட்டத்தை துவங்கிட அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 8 May 2024 9:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  2. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  3. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  4. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  5. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  6. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...