/* */

சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கம்

Erode news- ஈரோடு மாவட்டம் சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் அனைத்து துறைகளின் சார்பில் தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கம்
X

Erode news- டிரென்டெக் 2024 என்ற தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கில் எடுக்கப்பட்ட படம்.

Erode news, Erode news today- சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் அனைத்து துறைகளின் சார்பில் தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் கட்டிடவியல் துறை, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியல் துறை, இயந்திரவியல் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை ஆகிய துறைகளின் சார்பில் டிரென்டெக் 2024 என்ற தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் உள்ள சுத்தானந்தன் அரங்கில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு, கல்லூரியின் தாளாளர் "பாரத் வித்யா சிரோமணி" டாக்டர்.வசந்தா சுத்தானந்தன் தலைமையேற்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ரமேஷ் மற்றும் கல்லூரியின் நலம் விரும்பி தெய்வசிகாமணி (ஸ்ரீ ஜூவல்லர்ஸ், ஈரோடு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக சென்னை டெட்டிரேடு டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் ஜெயபிரசாந்த் கலந்து கொண்டு கட்டிடவியல் துறை, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியல் துறை, இயந்திரவியல் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை ஆகிய துறைகளில் உள்ள வளர்ச்சியைப் பற்றியும், பொறியாளர்களுக்கு அதில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பற்றியும், புதிய தொழில்நுட்பங்களைப் பற்றி புதிய யோசனைகளை சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை இறுதியாண்டு மாணவி சௌமியா வரவேற்புரை ஆற்றினார். விழாவின் இறுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த மூன்றாம் ஆண்டு மாணவி மாலினி நன்றியுரை நல்கினார். இக்கருத்தரங்கிற்கு நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் வருகை புரிந்து கருத்தரங்கில் கலந்து கொண்டு தங்களது தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து விளக்கம் அளித்தனர்.

மேலும், பல மாணவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் போட்டிகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் ஜெய் பிரசாந்த் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை முனைவர்கள் கவிதா, சிவக்குமார், மோகன், வெற்றிவேல், சுஜிதா ஆகிய துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சபாபதி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் மற்றும் மாணவ மாணவியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 4 May 2024 12:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  4. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  9. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  10. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!