/* */

போராடி தான் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை: வக்கீல் கோபாலகிருஷ்ணன் பேட்டி

போராட்டத்திற்கு பின்னர் தான் கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என அவரது வக்கீல் கூறினார்.

HIGHLIGHTS

போராடி தான் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை: வக்கீல் கோபாலகிருஷ்ணன் பேட்டி
X

செய்தியாளர்கள் சந்திப்பில் வக்கீல் கோபாலகிருஷ்ணன்.

கோவை நீதிமன்ற வளாகத்தில் யூ டியூபர் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் கையில் 2 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. சவுக்கு சங்கருக்கு மாவு கட்டு போட்டுள்ளனர்.

சிகிச்சைக்கு பின்பு தான் மன அழுத்ததில் இருந்து வெளியே வந்துள்ளதாக சவுக்கு சங்கர் தெரிவித்தார். இப்போது சிறையில் தாக்கப்பட்டது உறுதியாகி உள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் காவலில் எடுப்பதாக மனு அளித்து இருந்த நிலையில், அதை பின் வாங்கி உள்ளனர்.

திங்கட்கிழமை கட்டு மாற்ற மீண்டும் அரசு மருத்துவமனைக்கு சவுக்கு சங்கரை அழைத்து வர வேண்டும். அதே போன்று கஷ்டடி மனு தொடர்பாக திங்கட்கிழமை சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளனர். 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டதாக சிறையில் உள்ள சவுக்கு சங்கரிடம் ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சவுக்கு சங்கருக்கு போராடி சிகிச்சை பெற்று உள்ளோம். வலது கையில் தான் சிறைக்கு சென்ற பின்பு தான் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தேனியில் அதிகாலை 1.30 மணிக்கு சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர். ஆனால், காலை 8 மணிக்கு மேல் தான் கஞ்சா வைத்திருந்தாக வழக்கு பதியப்பட்டுள்ளது. ரொம்ப மெனக்கிட்டு கஞ்சா வழக்கு போலீசார் போட்டுள்ளனர். ஆனால் கஞ்சா வழக்கு பொய் வழக்கு என நிருப்பிக முடியும் என சவுக்கு சங்கர் கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்களை அவர் வைத்துள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 9 May 2024 11:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  2. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  3. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  4. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  5. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  6. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  7. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
  9. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  10. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்