/* */

World Organ Donation Day 2023-இன்று உலக உறுப்பு தான தினம் 2023..! இந்தியாவில் என்று தெரியுமா?

ஒரு மனித உறுப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை உலகுக்கு உணர்த்த உலக உறுப்பு தான தினம் அனுசரிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

World Organ Donation Day 2023-இன்று உலக உறுப்பு தான தினம் 2023..! இந்தியாவில் என்று தெரியுமா?
X

World Organ Donation Day 2023-உலக உறுப்பு தான தினம் 2023 

World Organ Donation Day 2023 in tamil, World Organ Donation Day 2023, World Organ Donation Day, History of World Organ Donation Day, Theme of World Organ Donation Day, Importance of World Organ Donation Day

உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல் உறுப்பு தானம் குறித்த தவறான கருத்துகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ம் தேதி உலக உறுப்பு தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த உன்னத நிகழ்வில் ஈடுபட்டுள்ள அமைப்புகளின் ஒரே நோக்கம், விலைமதிப்பில்லாத மனித உயிர்களைக் காப்பாற்றுவதே ஆகும். மரணத்திற்குப் பிறகு உறுப்புகளை தானம் செய்வதன் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதும், அதை மக்களுக்குக் கற்பிப்பதும் ஆகும். சிறுநீரகம், இதயம், கணையம், கண்கள் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்பு தானம் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றும்.


ஒரு உறுப்பை தானம் செய்வது என்பது ஒரு நபரின் ஒப்புதலுடன், அவரது உறுப்புகளை சட்டப்பூர்வமாக அகற்றி மற்றொரு நபருக்கு இடமாற்றம் செய்ய அனுமதிக்கும் செயல்முறையாகும்.

கடந்த காலங்களில் தொற்று நோய் மூலமாக மனித உயிர்களை அதிக அளவில் இழந்தோம். தற்போது உறுப்பு செயலிழப்பு முன்னணி நோய்களில் ஒன்றாக இருக்கிறது. உடல் உறுப்புகள் கிடைக்காததால், பல ஏழை நோயாளிகள் தங்கள் உயிரை இழக்கின்றனர்.

இதயம், சிறுநீரகம், கணையம், நுரையீரல், கல்லீரல், குடல், கைகள், முகம், திசுக்கள், எலும்பு மஜ்ஜை மற்றும் ஸ்டெம் செல்களை தானம் செய்வதன் மூலம் ஒரு முயற்சியால் எட்டு உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

World Organ Donation Day 2023 in tamil

உலக உறுப்பு தான தின முழக்கம்

இந்த ஆண்டு, 2023ம் ஆண்டு உலக உறுப்பு தான தின முழக்கம் “தன்னார்வமாக தொண்டு செய்ய முனையுங்கள். குறைபாடுகளை களைய அதிக உறுப்பு தானம் செய்பவர்கள் தேவை. உறுப்பு தானத்திற்கான உறுதிமொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்த உள்ளூர் பொதுமக்களுக்கு உலகளாவிய அழைப்பு விடுப்பதன் மூலம் ஒரு உறுப்பு தேவையின் அவசியத்தை உணர்த்தமுடியும்.

இறந்து உறுப்புகளை வழங்கும் நன்கொடையாளர்கள் உலகளவிலும் மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் உறுப்பு தேவையை பூர்த்தி செய்ய முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஏனெனில் இறந்த ஒரு நன்கொடையாளரால் எட்டு உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

2021ம் ஆண்டில், உலகளவில் 1,44,302 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இதில் 26.44% (38,156) பேர் இறந்தவர்களின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மொத்தம் 12,259 மாற்று அறுவை சிகிச்சைகளை செய்துள்ளது.

இது உலகளாவிய மாற்று அறுவை சிகிச்சைக்கு 8 சதவீத பங்களிப்பாகும். இதில் சிறுநீரகங்கள் (74.27%) அதைத் தொடர்ந்து கல்லீரல் (23.22%), இதயம் (1.23%), நுரையீரல் (1.08%), கணையம் (0.15) மற்றும் சிறுகுடல் (0.03%).

இந்தியாவில் இறந்த நன்கொடையாளர்களின் மாற்று அறுவை சிகிச்சையின் மொத்த எண்ணிக்கை 4.5% (552).

ஒரு ஆய்வு அறிக்கையின்படி, 2021ம் ஆண்டினை ஒப்பிடுகையில், இந்தியாவில் முறையே சிறுநீரகம் (759), கல்லீரல் (279) மற்றும் இதயம் (99) ஆகியவற்றில் 1137 அதிகமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இருப்பினும், இந்திய சுகாதார அமைச்சகத்தின் மதிப்பீட்டின்படி, தேவையைப் பூர்த்தி செய்ய சுமார் 175,000 சிறுநீரகங்கள், 50,000 கல்லீரல்கள், இதயங்கள் மற்றும் நுரையீரல்கள் மற்றும் 2,500 கணையங்கள் தேவைப்படுகின்றன.


2013 மற்றும் 2021 க்கு இடையில் இறந்த நன்கொடையாளர்களில் பத்து லட்சம் பேருக்கு : 1 என்ற சத வீதம் ஒப்பீட்டளவில் நிலையானதாக உள்ளது. இந்த அளவை வைத்துப் பார்க்கும்போது இந்தியா உறுப்பு தானம் செய்வதில் தன்னிறைவுப் பெற, இறந்த நன்கொடையாளர்களில் பத்து லட்சம் பேருக்கு 62 பேர் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

World Organ Donation Day 2023 in tamil

இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் 2021ம் ஆண்டு அறிக்கையின்படி, 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் விபத்து தொடர்பான இறப்புகளாகப் பதிவாகியுள்ளனர். இருப்பினும், 2021 உலகளாவிய உறுப்பு தான அறிக்கையின்படி 552 இறந்த மூளை இறப்பு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மட்டுமே செய்யப்பட்டன.

எனவே, உடலுறுப்பு தானம் செய்வதற்கு தன்னார்வத் தொண்டர்கள் பதிவு செய்வதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், உயிர்வாழ்வதற்கான உறுப்பு தேவைப்படும் பலருக்கு உதவலாம், இதன் மூலம் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை (காத்திருப்போர் பட்டியல்) குறையும்.


World Organ Donation Day 2023 in tamil

உறுப்பு தான நாளின் வரலாறு

ரொனால்ட் லீ ஹெரிக் என்பவர் தான் உறுப்பு தானம் செய்த முதல் நபர் ஆவார். 1954 ஆம் ஆண்டில், அவர் தனது சிறுநீரகத்தை தனது இரட்டை சகோதரருக்கு அளித்தார். மேலும் டாக்டர் ஜோசப் முர்ரே இந்த வெற்றிகரமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட முதல் மருத்துவர் ஆவார். பின்னர் 1990 இல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் கொண்டு வந்ததற்காக உடலியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

உறுப்பு தானம் பற்றிய முன்முயற்சிகளைப் பொறுத்தவரை, உலகின் பல்வேறு பகுதிகள் அங்குள்ள நிலைமைகள் மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உறுப்பு தான அறியாமை மற்றும் முக்கியத்துவத்தை சமாளித்து வருகின்றன.

இந்தியாவில், உடல் உறுப்பு தானம் செய்யும் செயலை ஊக்குவிக்கும் வகையில், 2010 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி தேசிய உறுப்பு தினம் கொண்டாடப்பட்டது. இது 2022 வரை தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) மூலம் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்டது.

1994ம் ஆண்டு ஆகஸ்ட் 3, அன்று இந்தியாவில் இறந்து-தானம் பெறப்பட்டு வெற்றிகரமாக செய்யப்பட முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை நினைவுகூரும் வகையில், 2023ம் ஆண்டில் இந்திய உறுப்பு தான தினம் ஆகஸ்ட் 3ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

Updated On: 13 Aug 2023 8:17 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  3. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  4. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  5. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  6. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  7. ஈரோடு
    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  9. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  10. ஈரோடு
    சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்...