/* */

சீனாவில் வரலாறு காணாத மழை: பயங்கர நிலச்சரிவு...!

சீனாவில் வரலாறு காணாத மழை: பயங்கர நிலச்சரிவு...!
X

சீனாவின் தெற்கு பகுதியில் வரலாறு காணாத கனமழையால் 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹெனான் மாகாணம் மிகவும் மோசமான பாதிப்புகளை அடைந்துள்ளது. மாகாணத்தின் தலைநகர் ஜெங்சோவில் ஒரே நாளில் 61.71 செ.மீ. மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் மழை பெய்துள்ளதாக வானிலை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தெற்கு சீனாவில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. கரைபுரண்டோடும் வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

இதனால் அங்குள்ள பல நகரங்களில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளன. மேலும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்டவையும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கனமழை, வெள்ளத்தை தொடர்ந்து ஹெனான் உள்ளிட்ட பல மாகாணங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்ததால் மக்கள் வாழ்வாதாரம் பாதித்து பெரும் அவதிப்பட்டனர்.

Updated On: 22 Jun 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்