/* */

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாள்(மே.12) இன்று

நவீன செவிலியர் முறையை உருவாக்கியவரும் செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளியை முதன் முதலாகத் தொடங்கியவரும் இவர்தான்

HIGHLIGHTS

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாள்(மே.12) இன்று
X

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்

நவீன செவிலியர் முறையை உருவாக்கியவரும் செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளியை முதன் முதலாகத் தொடங்கியவருமான ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் இன்று.

இத்தாலியின் ஃப்ளாரன்ஸ் நகரில் பிரிட்டிஷ் செல்வக் குடும்பத்தில் பிறந்தார் (1820). வீட்டிலேயே ஜெர்மன், லத்தீன், ஃபிரெஞ்ச் ஆகிய மொழிகளைக் கற்றார்.

ஆழ்ந்த இறை நம்பிக்கை கொண்டிருந்த இந்த சிறுமிக்கு 16 வயதை நெருங்கும்போது, செவிலியராக சேவையாற்று வதுதான். இறைவன் தனக்கு விதித்துள்ள பணி என்று உறுதியாக நம்பினார். 17 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற பெற்றோரின் விருப்பத்தை நிராகரித்து, செவிலியராக சேவையாற்றப் போகிறேன் என்ற தனது முடிவை அறிவித்தார்.

1844 -ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள லூத்தரன் மருத்துவம னையில் செவிலியர் பயிற்சியில் சேர்ந்தார். 1850-ல் லண்டனில் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்தார். இவரது பணிகளால் மிகவும் கவரப்பட்ட மருத்துவமனை தலைவர் ஒரே ஆண்டுக்குள் இவரை செவிலியர் கண்காணிப்பாளராக நியமித்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் வேகமாகப் பரவி வந்த காலரா நோய் அந்த மருத்துவமனையில் நிலவிய சுகாதாரமற்ற சூழல் ஆகியவற்றால் இவரது பணி மிகவும் சவாலாக இருந்தது.கடுமையான உழைப்பு இவரது உடல்நலத்தை பாதித்தது. குணமாவதற்கு முன்னரே இவரது செவிலியர் வாழ்வில் மிகப் பெரிய சவாலான சூழலை இவர் எதிர்கொண்டார்.

ரஷ்யப் பேரரசுக்கும் பிரட்டிஷ் பேரரசுக்கும் இடையே, போர் மூண்டது. மிகவும் குறைவான வசதி கொண்ட க்ரிமியா என்ற இடத்தில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.சுகாதாரச் சீர்கேடு நிலவியது. இதனால் நோய்களும் பரவின. பயிற்சி பெற்ற ஒரு செவிலியர் குழுவுடன் வருமாறு இவருக்கு அழைப்பு வந்தது. உடனடியாக, 34 செவிலியர்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு க்ரிமியா புறப்பட்டார்.

தனது செவிலியர் குழுவுடன், ஓரளவுக்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உதவியுடன் அந்த மருத்துவமனை முழுவதையும் சுத்தம் செய்தார். தினமும் 20 மணிநேரம் நோயாளிகளுக்கு சேவையாற்றினார்.இரவின் இருளில் கையில் விளக்கை ஏந்தியவாறு ஒவ்வொரு நோயாளியாகச் சென்று பார்த்தார். காயம்பட்ட போர் வீரர்கள் தங்களைக் காக்க வந்த தேவதையாக இவரைப் போற்றினர். ‘த லேடி வித் தி லாம்ப்’ என்றும் ‘தி ஏஞ்சல் ஆஃப் தி க்ரிமியா’ எனவும் பாசத்துடன் இவரைக் குறிப்பிட்டனர்.

தான் பெற்ற அனுபவங்களை மொத்தம் 830 பக்கம் கொண்ட குறிப்புகளாக எழுதிவைத்தார். அது நூலாக வெளிவந்தது. அவருக்குப் பரிசுகளும், ரொக்கமும் வழங்கப்பட்டன. அந்தத் தொகையை கொண்டு, லண்டனில் செயின்ட தாமஸ் மருத்துவமனையைத் தொடங்கினார். அங்கு ‘நைட்டிங்கேல் ட்ரெய்னிங் ஸ்கூல் ஃபார் நர்சஸ்’ என்ற பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார். ஓய்வு இல்லாத கடுமையான உழைப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டார்.

ஆனாலும் படுக்கையில் இருந்தபடியே சுகாதாரம், செவிலியர் பயிற்சியில் மேம்பாடு, சீரமைப்புகளில் கவனம் செலுத்தினார். நோயுடனும், அதீத சோர்வுடனும் போராடி வந்தாலும் இறுதிவரை மனிதகுல நலனுக்காக சேவையாற்றி யவர் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்.இவரது நினைவைப் போற்றும் வகையில் இவர் பிறந்த தினம் உலக செவிலியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.தன்னுயிர் கருதாது மண்ணுயிர் காக்கும் செவிலியர்களை வாழ்த்துவோம்.

Updated On: 12 May 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்