உக்ரைன் அதிபரின் மாளிகையை ஏலம் விட தயாராகும் ரஷ்ய அரசு

உக்ரைன் அதிபரின் வெக்கேஷன் மாளிகையை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. மேலும் போருக்கு பணம் திரட்டுவதற்காக அதை ஏலம் விட திட்டமிட்டுள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உக்ரைன் அதிபரின் மாளிகையை ஏலம் விட தயாராகும் ரஷ்ய அரசு
X

உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட கிரிமியத் தலைவர் இதுதொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் உக்ரேனிய வணிகர்கள் மற்றும் பொது நபர்களுக்குச் சொந்தமான 57 சொத்துக்களை தேசியமயமாக்க ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது.

"தடைசெய்யப்பட்ட கிரிமியன் டாடர் பாராளுமன்றத்திற்கு சொந்தமான சிம்ஃபெரோபோலில் உள்ள கட்டிடம் மற்றும் ஒலெனா ஜெலென்ஸ்காவின் அடுக்குமாடி குடியிருப்பு உட்பட பல சொத்துகளுக்கான உரிமைகளை கிரிமியா மீண்டும் பெறும்" என்று கிரிமியா கவர்னர் செர்ஜி அக்ஸியோனோவ் தெரிவித்துள்ளார்.

ஜெலென்ஸ்கி குடும்பம் 2013 இல் கிரிமியாவில் உள்ள புகழ்பெற்ற கடலோர நகரமான லிவாடியாவில் மூன்று அறைகள் கொண்ட பென்ட்ஹவுஸ் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியதாக கூறியுள்ளது. ரஷ்ய அரசு ஊடகத்தின்படி, இந்த சொத்து மதிப்பு சுமார் $800,000 (ரூ. 6,61,69120) ஆகும்.

இதனையடுத்து இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஏலம் விடப்படும் என்றும், உக்ரைனில் நடக்கும் ரஷ்யாவின் போருக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என கிரிமியா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் விளாடிமிர் கான்ஸ்டான்டினோவ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரஷ்யா- உக்ரைன் இடையே ஒராண்டுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினை கொலை செய்ய உக்ரைன் முயற்சி மேற்கொண்டதாகவும், அதிபரின் கிரெம்ளின் மாளிகையை தாக்குவதற்காக அனுப்பப்பட்ட 2 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.

ட்ரோன்கள் வந்த நேரத்தில் அதிபர் புதின், கிரெம்ளின் மாளிகையில் இல்லை என்றும், அதிபர் புதினுக்கும், கிரெம்ளின் மாளிகைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது. இது ரஷ்ய அதிபரை படுகொலை செய்வதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் முயற்சியாக கருதுகிறோம் என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

அதிபரின் கிரெம்ளின் மாளிகை அருகே இரண்டு ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. அவை கிரெம்ளின் மாளிகை அருகே விழுந்து எரியும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

ஆனால் ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது. கிரெம்ளின் மாளிகை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கும், உக்ரைனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், கிரெம்ளின் மாளிகையை தாக்குவதன் மூலம் ராணுவ பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது’’ என உக்ரைன் அதிபரின் செய்தி தொடர்பாளர் மிகாய்லோ போடோல்யாக் கூறியுள்ளார்.

இந்நிலையில், மாஸ்கோவில் அங்கீகாரம் அற்ற ட்ரோன்கள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக மாஸ்கோ மேயர்செர்கே சோபியானின் தெரிவித்துள்ளார். அரசிடம் சிறப்பு அனுமதி பெறாமல் ட்ரோன்கள் பறக்கவிடுவதற்கு அனுமதிக்கப்படாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 May 2023 11:00 AM GMT

Related News

Latest News

 1. தஞ்சாவூர்
  தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
 2. தமிழ்நாடு
  அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
 3. தஞ்சாவூர்
  தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
 4. தமிழ்நாடு
  விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
 5. உலகம்
  வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
 6. உலகம்
  27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
 7. இந்தியா
  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
 8. தமிழ்நாடு
  புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
 9. வந்தவாசி
  பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
 10. நாமக்கல்
  நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...