/* */

7ம் நூற்றாண்டு சிறுமி எப்படி இருப்பாள்..? தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் சாதனை..!

seventh century teen age girl look like -7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டீன் ஏஜ் சிறுமி எப்படி இருப்பார் என்பதை ஆச்சர்யப்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளனர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.

HIGHLIGHTS

7ம் நூற்றாண்டு சிறுமி எப்படி இருப்பாள்..? தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் சாதனை..!
X

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட பதினாறு வயது சிறுமியின் தோற்றம்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் முகத்தை புனரமைப்பு செய்து உருவாக்கம் செய்ய முடிந்தது. அந்தச் சிறுமி எப்படி இருக்கிறாள் என்று படத்தைப் பாருங்கள்.

நம்பமுடியாத ஒரு புதிய சாதனையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அதுவும் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் முகத்தை புனரமைப்புச் செய்து உருவாக்கம் செய்துள்ளனர்.


சிறுமி ஒரு அரிய பழைய மற்றும் கார்னெட் சிலுவையுடன் ('ட்ரம்பிங்டன் கிராஸ்') புதைக்கப்பட்டு இருந்தார். அந்த சிறுமியின் மண்டை ஓட்டின் பகுப்பாய்வின் மூலமாக புனரமைப்புச் செய்யப்பட்டது.

seventh century teen age girl look like

ஹெவ் மோரிசன், ஒரு தடயவியல் நிபுணர். அவர் அந்த சிறுமியின் மண்டை ஓட்டின் அளவீடுகள் மற்றும் காகசியன் பெண்களின் திசுவின் ஆழம் பற்றிய தகவல்களைப் பயன்படுத்தி அந்த உருவப்படத்தை வரைந்தார்.

டிஎன்ஏ பரிசோதனையின்றி மாரிசனால் அவரது கண்கள் மற்றும் முடியின் சரியான நிறத்தை கண்டறிய முடியவில்லை. ஆனால் அவர் இறப்பதற்கு சற்று முன்பு அவர் எப்படி தோன்றினார் என்பதை புகைப்படம் சரியாக காட்டுகிறது.

அவர் அந்த படத்தை வரையும்போது அவளுடைய முகம் வளர்ச்சியடைவதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்தது. அவளது இடது கண் வலது கண்ணை விட அரை சென்டிமீட்டர் குறைவாக இருந்தது. இது அந்த சிறுமியின் வாழ்க்கையில் மிகவும் கவனிக்கத்தக்கதாக இருந்திருக்கும்" என்று EurekAlert பகிர்ந்த செய்திக்குறிப்பில் மோரிசன் கூறினார்.

seventh century teen age girl look like


தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அந்தப் பெண் ஆல்ப்ஸ் மலைக்கு அருகே எங்கிருந்தோ வந்திருக்கலாம். தெற்கு ஜெர்மனியில் இருந்து, 7 வயதை எட்டிய பிறகு பயணம் செய்ததையும் கண்டுபிடித்துள்ளனர். அவள் இங்கிலாந்திற்குச் சென்றபோது அவளது உணவுமுறை ஒரு சிறிய அளவில் ஆனால் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் பெற்றுள்ளதும் மற்றும் உணவின் அளவு குறைந்துள்ளது என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

தெற்கு ஜெர்மனியின் ஆல்ப்ஸ் மலைக்கு அருகாமையில் உள்ள ஒரு பகுதியிலிருந்து, இங்கிலாந்தின் மிகவும் சமதளமான பகுதிக்கு அவள் இடம் பெயர்ந்தபோது அவள் மிகவும் இளம் பெண்ணாக இருந்தாள். மேலும் அவள் மிகவும் பரிச்சயமில்லாத இடத்திற்கு வெகுதூரம் பயணித்ததாலும் உணவு வித்தியாசமாக இருந்ததாலும் அவள் உணவைக் குறைத்திருக்கலாம். அதனால், அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கலாம். அது அந்த சிறுமிக்கு பயமாக இருந்திருக்கும்" என்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் லெகெட் செய்திக்குறிப்பில் கூறினார்.

முந்தைய விசாரணைகளின்படி, இளம் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என்பது மட்டும் புலனாகிறது. ஆனால் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. சிலுவை, தங்க ஊசிகள் மற்றும் நேர்த்தியான ஆடைகளை அணிந்துகொண்டு, செதுக்கப்பட்ட மரத்தால் செய்யப்பட்ட படுக்கையில் சாய்ந்து, அசாதாரணமான முறையில் அடக்கம் செய்யப்பட்டு இருந்தாள்.


seventh century teen age girl look like

என்னே ஒரு விந்தை! 7ம் நூற்றாண்டில் ஒரு சிறுமி எப்படி இருந்தாள்? அவள் எதனால் இறந்திருப்பாள் என்று ஆய்வில் கண்டறிந்ததுடன், எங்கிருந்து பயணித்தாள் என்பதையும் கண்டறிந்துள்ளனர். நீங்களும் அந்த சிறுமியின் படத்தைப்பாருங்கள். அறிவியல் வளர்ச்சி நம்மை வியக்கவைக்கிறது.

Updated On: 22 Jun 2023 7:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...