/* */

pakistan international image-சர்வதேச அளவில் பாகிஸ்தானின் தோற்றம் எப்படி உள்ளது? 'நச்' னு ஒரு பதில்..!

pakistan international image-ஒரு நாட்டின் அரசியல் செயல்பாடுகளால் அந்த நாட்டு மக்கள் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

HIGHLIGHTS

pakistan international image-சர்வதேச அளவில் பாகிஸ்தானின் தோற்றம் எப்படி உள்ளது? நச் னு ஒரு பதில்..!
X

pakistan international image-இந்தியா-பாகிஸ்தான் உறவுகள்.(கோப்பு படம்)

ஒரு பெரிய இந்திய நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் தனிஸ்க் என்பவர் வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு நடந்த ஒரு சம்பவத்தை அவர் சொல்கிறார்.

அந்த நாட்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை தனிஷ்க் சந்திக்க நேர்ந்தது. அவர் முதலில் தன்னை இந்தியன் என்று அறிமுகம் செய்து கொண்டார். 'ஓ' அப்படியா.. மகிழ்ச்சி..நானும் இந்தியாவை சேர்ந்தவன்தான்' என்று கைகுலுக்கிவிட்டு, 'நீங்கள் இந்தியாவின் எந்தப் பகுதியை சேர்ந்தவர் என்று கேட்டதும், அவர் பேச்சில் ஒரு தயக்கம் ஏற்பட்டது. பின்னர் ஒருவாறு சமாளித்து, 'நான் ஒரு பாகிஸ்தானியர்' என்று கூறினார்.


'அடடே.. இதற்கு ஏன் இவ்வளவு தயக்கம்.. ஏன் என்னிடம் பொய் சொல்கிறீர்கள்' என்று தனிஷ்க் கேட்டபடி மேலும் தொடர்ந்தார்.. 'எனக்கு பாகிஸ்தானையோ பாகிஸ்தானியரையோ பிடிக்காது என்ற எண்ணத்தை உங்களிடம் நான் வெளிப்படுத்தினேனா..? என்று கேட்டார்.

pakistan international image-

அப்போது அந்த பாகிஸ்தானியர் கூறுகையில், 'உண்மையில் பலருக்கு பாகிஸ்தானை பிடிக்காது. நாங்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு அப்படியல்ல. நல்ல பெயர் இருக்கிறது' என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

'நீங்கள் அப்படி எண்ணத் தேவையில்லை. உண்மையில் பாகிஸ்தானையோ அல்லது பாகிஸ்தானியரையோ இந்தியர் வெறுப்பதில்லை. நாட்டின் அரசியல் நிலைதான் வேறுபடுத்துகின்றனவே தவிர, மக்கள் என்ன செய்வார்கள்..?" என்று தனிஷ்க் கூறினார்.

அதற்கு அந்த பாகிஸ்தானியர், 'பாகிஸ்தான் அரசாங்கம் உண்மையில் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். மாறாக மற்ற நாடுகளின் பிரச்னைகளில் கவனம் செலுத்தக் கூடாது. உலக அரசியலில் இவர்களின் செயல்களால் வெளிநாடுகளில் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.' என்று வருத்தமுற்றார்.

pakistan international image


நம்ம தனிஷ்க் உடனே, 'பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த ஒரு தனி நபருடனும் எந்த பிரச்னையும் இந்தியர்களுக்கு இல்லை. சீனாவில் கூட எனக்கு காமத் என்ற பாகிஸ்தானிய நண்பர் இருக்கிறார். அவருடன் சாட்டிங்கில் நான் அரட்டை அடித்துக்கொண்டிருப்பேன். அவர் எனக்கு நல்ல நண்பர்.' என்றார்.

சர்வதேச அளவில் பாகிஸ்தானின் தோற்றம் எவ்வாறு உள்ளது என்பது பாகிஸ்தானியராலேயே உணர்த்தப்பட்டுள்ளது. உண்மைதானே..? பாகிஸ்தான் நாட்டு மக்கள் என்ன செய்வார்கள்..?

Updated On: 16 April 2023 8:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!