/* */

வாழ்க்கைமுறை மாற்றத்திற்காக 4 நாட்கள் மட்டுமே வேலை..!ஹை..ஜாலி..ஜாலி..!

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்தால் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கப்படுமா என்ற சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வாழ்க்கைமுறை மாற்றத்திற்காக 4 நாட்கள் மட்டுமே வேலை..!ஹை..ஜாலி..ஜாலி..!
X

பிரிட்டனில் நான்கு நாட்கள் வேலை என்ற சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. (மாதிரி படம்)

அடடா.. வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலையா? இது சூப்பரா இருக்கே என்று நீங்கள் கொண்டாடுவது தெரிகிறது. ஆனால், அது நம்ம ஊரில் இல்லை. அது இங்கிலாந்தில். அதுவும் இப்போது பரிசோதனை முயற்சியில் உள்ளது.

அந்த பரிசோதனை 6 மாதங்கள் நீடிக்கும். சிறிய மற்றும் பெரிய நிதி நிறுவனங்கள் வரை சுமார் 70 நிறுவனங்களில் வேலை செய்யும் 3ஆயிரத்து 300 ஊழியர்கள் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்யப்போகிறார்கள். கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகங்களுடன் வீக் குளோபல், திங்க்டேங்க் அட்டநமி போன்ற நிறுவனங்கள் இணைந்து இந்த சோதனையில் ஈடுபடுகின்றன.

இந்த சோதனை மூலம் தொழிலாளர்களின் நலன், உற்பத்தி திறன் எப்படி அதிகரிக்கிறது? இந்த நடைமுறையால் நிறுவனத்தின் வளர்ச்சி எப்படி அமையும் என்பன போன்ற சில அடிப்படை காரணிகளை கொண்டு அளவீடு செய்ய உள்ளனர்.

இந்த 3ஆயிரத்து 300 பணியாளர்களும் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்தாலும் அந்த 70 நிறுவனங்களும் முழு சம்பளத்தையும் வழங்கும். பிரிட்டனில் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த புதிய சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Updated On: 7 Jun 2022 8:20 AM GMT

Related News