/* */

சீனாவின் பொருளாதாரம் மட்டுமல்ல நாடே வீழ்ச்சியை சந்திக்கிறதா?

சீனாவின் பொருளதாரம் மட்டுமல்ல, அந்த நாடே சிதையும் நிலையை நோக்கி செல்கிறது.

HIGHLIGHTS

சீனாவின் பொருளாதாரம் மட்டுமல்ல  நாடே வீழ்ச்சியை சந்திக்கிறதா?
X

பைல் படம்

சீனாவில் பொருளாதாரம் வளர வளர எக்கச்சக்கமாக பணம் வந்தது. மேலை நாடுகள் மேலும், மேலும் போட்டி போட்டு முதலீடடு செய்தார்கள். அதனால் அந்த நாடு மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகியது. தொட்டதெல்லாம் துலங்கியது.

சாதாரணமாக 3-5% வட்டி கொடுக்கும் வங்கிகள், மக்களிடம் இருந்து ஏகப்பட்ட பணம் டெபாஸிட்டாக வர, வங்கிகள் கடன் கொடுக்க ஆள் இல்லாமல், அதை ரியல் எஸ்டேட் பிஸினஸ்களில் முதலீடு செய்தார்கள். அதில் ரிஸ்க் இருப்பதால், நல்ல வட்டி கிடைக்க, அதை மக்களுக்கு கொடுக்க, அவர்களுக்கு கிடைக்கும் வட்டி என்பது 11% வரை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. அதனால் மேலும் மேலும் மக்கள் வங்கிகளில் டெபாஸிட் செய்ய, வங்கிகள் ரியல் எஸ்டேட்டிற்கு கடன் கொடுக்க, ரியல் எஸ்டேட் உச்சம் தொட்டது.

ஆனால் இதுபோன்ற விஷயங்கள் எங்காவது சங்கிலி தொடர்பு வீழ்ந்தால் மொத்தமாக வீழும் என்பது தெரியும். இருந்தாலும் ரிஸ்க் எடுத்து செய்தார்கள். கட்டுப்படுத்த வேண்டிய அரசு கட்டுப்படுத்தவில்லை. அப்படி எல்லா பணங்களும் வங்கிகளுக்கு ஒரு பக்கம் பெருக, மறுபக்கம் வெளிநாட்டு முதலீடுகள், ஏற்றுமதி மூலம் வருமானம் என்று மறுபக்கமும் பெறுகியது. அதனால், தனது கட்டமைப்பை தேவைக்கு அதிகமாக உயர்த்தியது.

அதாவது சென்னை-சேலத்துக்கு 8 வழி சாலை போதும் என்றால், 16 வழி சாலை போட்டார்கள். அதவாது தேவையற்ற முதலீடு. மறுபக்கம் அதன் பாதுகாப்பை அமெரிக்காவிற்கு இணையாக பெருக்கியது. அதையும் தாண்டி அதிகம் இருந்த பணத்தை வெளிநாடுகளுக்கு அதிக வட்டிக்கு கொடுத்தது, One Belt One Road என்று உலகம முழுவதும் முதலீடு செய்து, தனது Supply Chain மூலம் உலகத்தை பொருளாதாரத்தை சீனா சார்ந்ததாக மாற்றி, தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முதலீடு செய்தது.

அந்த சூழலில், கடன் வாங்கிய நாடுகள் வட்டிசுமை தாங்க முடியாமல் ஒன்றன்பின் வீழ்ந்தது. அதனால் ஸ்ரீலங்காவில், பாகிஸ்தானில் செய்தது போல துறைமுகம் போன்ற கட்டமைப்பை வாங்கியது. ஆம் எனக்கு தேவை தினமும் ஒரு லிட்டர் பால் என்பதற்கு, ஒரு 5 லிட்டர் பால் கறக்கும் மாட்டையே விலைக்கு வாங்கியது. அதே சமயம் அதற்கு வந்து கொண்டு இருந்த மேலை நாட்டின் ஏற்றுமதி, முதலீடுகள் தொடர்ந்து வந்திருந்தால், சங்கிலி தொடர்பால் அதை சமாளித்திருக்க முடியும். ஆனால் அங்கேயும் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்க, சீனா வீழாவிட்டாலும், அபரிதமான வளர்ச்சியை தொடர் முடியவில்லை.

இந்த சூழலில் கொரானா வந்ததும் உலகமே முடங்கி விட்டது. சீனா, அதை பயன்படுத்தி தரமில்லாத பொருட்களை விற்றதால் நம்பிக்கையை பெருமளவு இழ்நதது. மேலும், அதன் தரமற்ற தடுப்பூசியால், அதன் உயிரிழப்புகள் அதிகரிக்க, கடுமையான கட்டுப்பாடுகள் மூலமும், தவறான Zero Covid பாலிசி மூலமும் அதன் உற்பத்தி பெருமளவில் பாதிக்க, மற்ற நாடுகள் சீனாவை மட்டும் சார்ந்திருப்பதில் இருக்கும் பிரச்னைகளை புரிந்து கொள்ள ஆரம்பித்தது.

அந்த நேரத்தில், மக்கள் வீடுகளை வாங்குவது நிற்க, ரியல் எஸ்டேட் வீழ, வங்கிகளின் பெரும் முதலீடு முடங்கியது. அதனால் மக்களின் மொத்த சேமிப்பும் வங்கிகளில் சிக்கியது. இப்போது அங்கே மீண்டும் பொருளாதாரம் திரும்ப அதில் பெரிய முதலைகள் என்று சொல்லப்பட்ட பெரும் பணக்காரர்கள் முதலீடுகள் செய்ய வேண்டும். ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வளர்ச்சிக்கான வய்ப்பு இல்லை என்பதால் அவர்கள் முதலீடு செய்ய தயாராக இல்லை.

மாறாக அங்கே இருந்த தொழிற்சாலைகள் அங்கிருந்து வேறுநாடுகள் செல்ல ஆரம்பிக்க, அதன் ரியல் எஸ்டேட் மேலும் வீழ்ந்தது. இது போன்ற வேளைகளில் சீன அரசாங்கம் அதில் முதலீடு செய்தால், அல்லது வங்கிகளுக்கு கடன் கொடுத்தால், அது டெபாஸிட் செய்த மக்களுக்கு போகும். அதன் மூலம் பொருளாதரம் ஓரளவு திரும்பியிருக்கும்.

ஆனால் சீன கம்யூனிஸ்ட் அரசாங்கம் வெளிநாடுகளில் செய்த முதலீடுகள் முடங்கி விட்டதால், அது வருமானம் ஈட்டாமல் டெட் இன்வெஸ்ட்மெண்ட் ஆகியது. அதே வேளையில், தனது தகுதிக்கு அதிகமாக பாதுகாப்பில் செய்த முதலீடுகள் எல்லாம் தேவைக்கு அதிகமாகி, பயனில்லாமல் போனது. சீனாவில் புதிய முதலீடுகள் இல்லாமல் ஒரு பக்கமும், மறுபக்கம் இருக்கிற முதலீடுகள் இந்தியாவிற்கு செல்வதால், அது பாதுகாப்பான நாடு அல்ல என்பதை பெரிய முதலீட்டாளர்கால் புரிந்து கொண்டார்கள். அந்த எண்ணத்தை மாற்ற, அது தன்னை அசைக்கு முடியாத பொருளாதார சக்தி என்று காட்ட நினைத்தது.

அதற்கு அது பயன்படுத்திய துருப்பு சீட்டு, மிக வலிமையான ராணுவம் என்று அது நம்பியதைத்தான். அதன்மூலம் இந்திய எல்லைகளில் ஊடுறுவல் செய்து, 1960 களில் செய்தது போல நாட்டை கபளீகரம் செய்தால், இந்தியா பாதுகாப்பு இல்லாத நாடு என்றாகி, முதலீடுகள் அங்கே போகாது. மற்ற போட்டி நாடுகளையும் தனது வலிமையான ராணுவம், மற்றும் கப்பற்படை மூலம் கட்டுப்படுத்த நினைத்தது.

ஆனல் இந்தியாவிடம் அதன் தரமற்ற இராணுவத்தின் வலிமை பல்லிளிக்க, அதன் பூச்சாண்டி வலிமை மேலும் சரிந்தது. அதனால் அமெரிக்காவும் தைவான் விஷயத்தில் தகராறு என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது! இந்த சூழலில் வெளிநாட்டு படைகளுடன் மோதி உலகின் தலை சிறந்த ராணுவம் என்று நிரூபித்தால் தான், அது உள் நாட்டில் அடக்கி வைத்திருக்கும் மக்களை கட்டுப்படுத்த முடியும். ஆனால் அதுவும் முடியாமல் போய்க்கொண்டு இருக்கிறது.

இப்போது, 1) மக்களிடம் வருமானம் இல்லாததால் உள்நாட்டு பொருளாதாரம் வீழ்ந்து விட்டது. 2) வெளி நாட்டில் முதலீடு செய்த பணம் வராக்கடனாகி வீணாகி போய்விட்டது. 3) மேலை நாட்டு முதலீடுகள் குறைந்தது மட்டுமல்ல, வெளியேற துவங்கியதால், உள்நாட்டில் வேலை இழப்புகள் வேகமாக அதிகரிக்கிறது. அதனால் வராக்கடன்கள் மேலும் அதிகரிக்க, வங்கிகள் திவாலை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது.

4) அதன் வலிமையான ராணுவம் என்று நம்பியது ஒரு புள்ளப்பூச்சி என்பதையும் உலகம் அறிந்து கொண்டது. அதனால் யாரையும் மிரட்டவும் முடியாது.இந்த சூழலில் அதன் பொருளாதார்த்தின் ஆணிவேறான பணம் அளவுக்கதிகமான கட்டமைப்பிலும், ரியல் எஸ்டேட்டிலும், வெளிநாட்டு முதலீட்டிலும், ராணுவ முதலீட்டிலும் முடங்கிப்போனது. இதை உயிர்ப்பிக்க முடியவில்லை.

5) அதன் வெள்ளை யானையான ராணுவம் மற்றும் அனைத்து படைகளின் செலவு மிக அதிகம் என்பதால் அதை சமாளிக்கவே நிறைய பணம் தேவைப்படுவதால், அது மேலும் அதன் பொருளாதாரத்தை வேகமாக பாதிக்கிறது. வரும் மாதங்களில் ராணுவ வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கும் நிலையே கேள்விக்குறியாகும் போது, அதை நிறுத்தினால் உள்நாட்டு கலவரம் வெடிக்கும் என்பதால் அதை தொடர்ந்தாக வேண்டிய கட்டாயம்.

அதற்கு ஒரே வாய்ப்பு, பெரிய உலகப்போர் வந்து அதில் தனது எதிரிகள் அனவைரும் சண்டைகட்டி வீழவேண்டும். அப்போது ஆயுதம் விற்றுப் பிழைக்கலாம் என்றால், அதன் ஆயுதங்களின் தரம் மோசமானது என்பதால், அதுவும் நடக்காது. அல்லது அது இந்தியா, அமெரிக்காவை வீழ்த்தி தான் ஒரு வல்லரசு என்று நிரூபித்து, உலகின் பெரியண்ணன் ஆக வேண்டும்.

அடுத்தது என்ன? இன்னொரு எளிதான வழி, இந்தியாவில் மோடி ஆட்சியை வீழ்த்துவதன் மூலம் தனது ஆதரவு தலைவர்களை வைத்து இந்தியாவை பாழாக்குவது ஒன்றே வழி.இதுவெல்லாம் எதுவும் முடியாவிட்டால் சீனாவின் வீழ்ச்சி நிதர்சமானது, தடுக்க முடியாதது. அந்த நாடு சிதறுண்டு திபெத், ஜிங்யாங் என்று உடையும். குறைந்த பட்சம் இந்தியா போன்ற நாடுகளுடன் சமாதானமாக போனால், அதன் வீழ்ச்சியை தள்ளிப்போடலாம், தவிர்க்க முடியாது. இல்லாவிட்டால் அதற்கு புதிய புதிய பிரச்னைகள் உருவாகி, அதன் வீழ்ச்சி துரிதமாகும்!

எந்த ஒரு பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்திக்கும்போது, அதனிடம் இருக்கும் சேமிப்புகள் அதன் புத்துணர்ச்சிக்கு உதவியதில்லை, வெளியே இருந்து வரும் புதிய ரத்தமே அதற்கு உதவுகிறது எனும்போது, அதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு! இந்த நிலையில் அதன் நம்பிக்கையான கம்யூனிஸ்ட் கட்சியில் பெரிய பின்னடைவை சந்திக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்! கெடுவான் கேடு நினைப்பான்!

Updated On: 31 Aug 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  7. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  9. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!