/* */

2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மிச்செல் ஒபாமா..?!

2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா போட்டியிடுவார் என ஒரு அறிக்கை தெரிவித்துளளது.

HIGHLIGHTS

2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மிச்செல் ஒபாமா..?!
X

முன்னாள் அமெரிக்க தினர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா(கோப்பு படம்)

Michelle Obama in President Election 2024 in tamil, Michelle Obama to Run For President In 2024, Michelle Obama Author, best-selling author Michelle Obama, Former President Barrack Obama wife Michelle

அதிக நூல் விற்பனையாகும் எழுத்தாளரும், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவியுமான மிச்செல் ஒபாமா, 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த காலத்தில் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் நிராகரித்திருந்தாலும், குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பை எதிர்கொள்வதற்கு ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் முதல் பெண்மணியான மிச்செல் ஒபாமாவை எதிர் பார்க்கிறார்கள் என்று புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

மிச்செல் ஒபாமா, 1964ம் ஆண்டு 17ம் தேதி பிறந்த அமெரிக்க வழக்கறிஞரும், எழுத்தாளரும் ஆவார். ஐக்கிய அமெரிக்காவின் 44வது குடியரசுத் தலைவரான பராக் ஒபாமாவின் மனைவியும், முதலாவது ஆப்பிரிக்க-அமெரிக்க முதல் சீமாட்டியும் ஆவார்.

சிகாகோவின் தென்பகுதியில் வளர்ந்த மிச்செல், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் ஹார்வர்டு சட்டப்பள்ளியிலும் படித்தவர். தனது துவக்க கால சட்டப் பணியை சிட்லி ஆசுட்டீன் என்ற சட்டநிறுவனத்தில் துவங்கினார். இந்த நிறுவனத்தில் பணி புரிகையில்தான் பராக் ஒபாமாவைச் சந்தித்தார்.


பின்னர் சிகாகோ நகர முதல்வர் ரிச்சர்டு எம் டேலியின் அலுவலகத்திலும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்திலும் பணியாற்றியுள்ளார்.

2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் மிச்செல் தனது கணவரின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பரப்புரையில் துணை நின்றார். 2008, 2012ஆம் ஆண்டு மக்களாட்சிக் கட்சியின் தேசிய மாநாடுகளில் முதன்மை உரையாற்றினார். ஒபாமா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

மிச்செல் ஒபாமா பெண்களுக்கான வழிகாட்டியாகவும் புதுமைப் பெண்களுக்கான அடையாளமாகவும் விளங்குகின்றார். வறுமை உணர்திறன், ஊட்டச்சத்து, உடற் திறன் பயிற்சிகள், மற்றும் நலவாழ்வு உணவு ஆகியவற்றை முன்னெடுத்து அதுசார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றார்

அவர் சிறந்த எழுத்தாளராகவும் விளங்குகிறார். அவரது புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின்றன. அவரது முதல் நூல் Crown American Grown ஆகும். அதைத் தொடர்ந்து 20 நூல்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்க பெண்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு பொது நபராக இருப்பதால், அவரை அமெரிக்க அதிபராக கொண்டுவர ஜனநாயக கட்சியினர் முனைப்புக்காட்டி வருகின்றனர்.

Updated On: 13 Aug 2023 7:13 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  8. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  9. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  10. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...