/* */

பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இருந்து இத்தாலி விலக முடிவு : சீனா அதிர்ச்சி..!

பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இருந்து விலகுகிறோம் என்று சீன பிரதமரிடம் இத்தாலி பிரதமர் மெலோனி தெரிவித்தார்.

HIGHLIGHTS

பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இருந்து இத்தாலி விலக முடிவு : சீனா அதிர்ச்சி..!
X

இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி(கோப்பு படம்)

Italy withdraws belt and road project

ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் ஆசியாவை சாலை மற்றும் கடல் மார்க்கமாக இணைக்க பெல்ட் அன்ட் ரோடு (பிஆர்ஐ) திட்டம் செயல்படுத்தப்படும் என சீனா அறிவித்தது. இந்த திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஜி7 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இத்தாலி மட்டுமே கடந்த 2004-ம் ஆண்டு பிஆர்ஐ திட்டத்தில் இணைந்தது. இந்த சூழ்நிலையில், சீனாவுடனான பிஆர்ஐ ஒப்பந்தம், எங்கள் நாட்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என இத்தாலி வெளியுறவு அமைச்சர் அந்தோனியோ தஜானி இந்த மாத தொடக்கத்தில் கூறியிருந்தார். இதுபோல, பிஆர்ஐ திட்டத்தில் இணைந்தது மிகப்பெரிய தவறு என இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி அவ்வப்போது கூறி வந்தார்.

இந்த சூழ்நிலையில், ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் கடந்த 9, 10 தேதிகளில் நடைபெற்றது. இதில் சீனா சார்பில் அந்நாட்டு பிரதமர் லி கியாங் பங்கேற்றார். இந்த மாநாட்டுக்கு நடுவே லி கியாங்கும் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியும் சந்தித்துப் பேசினர்.

அப்போது, பெல்ட் அன்ட் ரோடு திட்டத்திலிருந்து இத்தாலி விலக முடிவு செய்துள்ளதாக மெலோனி தெரிவித்துள்ளார். இந்த முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கியாங் விடுத்த வேண்டுகோளை ஏற்க மெலோனி மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

Updated On: 12 Sep 2023 5:05 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?