/* */

Israel's Next Move on Palestine War-தலைக்கு வந்த ஆபத்தா.? எங்கு செல்கிறது பாலஸ்தீன போர்..?

போர் நிலவரங்களை உற்றுநோக்கி வரும் சில நிபுணர்களின் கருத்துப்படி இஸ்ரேல்- பாலஸ்தீன போர் விரைவில் ஈரானை நோக்கி திரும்பும் என தெரிகிறது.

HIGHLIGHTS

Israels Next Move on Palestine War-தலைக்கு  வந்த ஆபத்தா.? எங்கு செல்கிறது பாலஸ்தீன போர்..?
X

இஸ்ரேல் ஹமாஸ் போர். நிவாரணப்பொருட்களை பெற்றுச் செல்லும் காசா மக்கள் (கோப்பு படம்)

இஸ்ரேல்- பாலஸ்தீன நிலவரப்படி இஸ்ரேல் இன்னும் வீரியத் தாக்குதலை தொடங்கவில்லை. மாறாக எதையோ எதிர்பார்க்கின்றது. அதாவது இது உடனடியாக முடியும் போர் அல்ல, மிக நீண்டகாலம் எடுக்கும் போர். மொத்த ஷியா அரபு நாடுகளும் அவற்றின் இயக்கங்களும் பங்குபெறும் போர் என்பதால் பெரும் கவலை அடையச் செய்கின்றது.

இந்த யுத்தம் மிகபெரும் யுத்தமாக மாறும் வாய்ப்புகளே அதிகம் உள்ளன. அதாவது ஈரானிய ஏவுகணைகள் பல இடங்களில் இருந்து இஸ்ரேலை தாக்கலாம் என்பதால் முதல்கட்டமாக வான்பாதுகாப்பை அந்த நாடு கடுமையாக வலுப்படுத்தி வருகிறது.


அதோடு மிக மிக நவீன கருவிகளோடு தரைப் படையினை மறுநிர்மாணம் செய்கின்றது. இப்போது அமெரிக்காவின் அதி நவீன "தாட்" வான்பாதுகாப்பு சாதனங்களை இஸ்ரேலில் களமிறக்கியுள்ளது. அவை பல இடங்களில் நிறுவப்படுகின்றது.

இதுதவிர அமெரிக்காவின் அதி நவீன கடற்படை விமானம் தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கிகள் எல்லாம் இஸ்ரேலை சூழ நிற்கின்றன. இஸ்ரேல் பெரும் போரை காசாவில் துவக்கினால் அது காசாவோடு நிற்காது. லெபனான், சிரியா, ஈரான், ஏமன் என பெரும் வகையில் நீளும் என எதிர்பார்க்கின்றது இஸ்ரேல்.

இந்த சூழலை எதிர்கொள்ள அமெரிக்காவின் துணை அவசியம் என்பது இஸ்ரேல் கணக்கு. இங்கே அமைதி காத்தால் (!?) அரபு நாடுகளில் இருக்கும் தன் நிலைகள் எல்லாம் தாக்கப்படும். அதனால் இனியும் தாமதிக்க முடியாது என அமெரிக்காவும் களமிறங்கி விட்டது. இது பல அபாய கணிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலிய அமைச்சர் கூறும்போது பாம்பின் தலையினை வெட்டினால், வால் அடங்கும் என்கின்றார். அதாவது ஹமாஸும் ஹெஸ்புல்லாவும் பாம்பின் வால்கள், தலை ஈரான். அதை வெட்டுவோம் என்பது பொருள்.

இது இனி ஹமாஸ் இஸ்ரேல் மோதலாக நிற்காது. ஈரான் அமெரிக்க மோதலாக மாறும். ஈரானும் அதன் இயக்கங்களுக்கும் இஸ்ரேல் அமெரிக்க கூட்டணிக்குமான பெரும் போராக மாறலாம். இது ரஷ்யாவின் மறைமுக திட்டமாக இருக்கலாமா எனும் சந்தேகமும் உண்டு.


உக்ரைன்- ரஷ்யா மோதலில் ஒரு ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டு தன்னைக் காக்க ஈரானை, ரஷ்யா பலி கொடுத்திருக்கலாம் எனும் சந்தேகமும் மறுக்க முடியாத விவாதமாக மாறி உள்ளது. ஈரானை ரஷ்யா கைவிடுமா என்றால் விடும். ஈரானின் எண்ணெய் சந்தையினை தான் கைப்பற்ற அது திட்டமிடலாம். இல்லை இதர கணக்குகளும் இருக்கலாம். உக்ரேனில் தனக்கு வைத்த கண்ணியினை மேற்காசியா பக்கம் ரஷ்யா திருப்பி விட்டிருக்கலாம்? எனும் அனுமானம் இருந்தாலும் அதற்கு உறுதியான ஆதாரமில்லை.

இஸ்ரேல் தன் நவீன ஏவுகணைகளை காசாவில் சோதிக்கின்றது. அவை மூவடுக்கு கான்கிரீட் சுவர்களை ஊடுருவி செல்லும் சக்தி கொண்டவை. எந்த மூலையில் எந்த முடுக்கில் கட்டடம் இருந்தாலும் எளிதில் நாகம் போல் வளைந்து சென்று துளைத்து வெடிக்கும் சக்தி கொண்டவை.

இப்போதைக்கு மட்டுப்படுத்தபட்ட தாக்குதலைத்தான் இஸ்ரேல் நடத்துகின்றது. அதே நேரம் வடக்கே ஹெஸ்புல்லாவுடன் மோதலை சிறிதாக தொடங்கியிருகின்றது.


நிச்சயம் ஹமாஸை ஹெஸ்புல்லாவினை சமாளிக்க இஸ்ரேலால் முடியும். அதற்கு அமெரிக்காவோ, அதன் அதிநவீன தாட் ஏவுகணை சிஸ்டமோ அவசியமில்லை. தாட் ஏவுகணை சிஸ்டம் என்பது 100 சதவீத பாதுகாப்பை வழங்கும் சாதனம்,அதுவும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தடுக்கும் விஷயம்.

அதனை ஹமாஸுக்கும் ஹெஸ்புல்லாவுக்கும் எதிராக வைக்கும் அவசியமில்லை. ஆனால் இஸ்ரேல் அணுகுண்டு தாக்குதலை ஈரானிடம் இருந்து எதிர்பார்க்காமல் தாட் ஏவுகணை அமைப்பினை பொருத்துவதில் சாத்தியமில்லை என பல கணக்குகள் ஓடுகின்றன, போரை ஹமாஸ் தொடங்கி வைத்துவிட்டது. அதன் முடிவு ஹமாஸின் எஜமான் ஈரானை முடிப்பதாக இருக்கலாம்.

Updated On: 25 Oct 2023 5:10 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  2. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  3. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  4. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  5. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  6. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  7. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  8. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்