/* */

அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட கர்நாடக மென்பொறியாளர் குடும்பம்..?!

கர்நாடகாவைச் சேர்ந்த இந்தியக் குடும்பம் மேரிலாந்தில் அவர்கள் குடியிருந்த வீட்டில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட கர்நாடக மென்பொறியாளர் குடும்பம்..?!
X

அமெரிக்காவில் இறந்துகிடந்த இந்தியக்குடும்பம்.(மாதிரி  படம்)

Indian family from Karnataka found dead in Maryland, Karnataka IT Engineers' Family found dead

அமெரிக்காவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக மென்பொறியாளர்களாக பணிபுரிந்து வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி அவர்களது ஆறு வயது மகனுடன் அவர்கள் குடியிருந்த வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) பால்டிமோர் காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இறந்த இருவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கொலைக்குப்பின்னர் அந்த ஆண் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. என்றாலும், இறப்புக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியக் குடும்பம் ஒன்று மேரிலாந்தில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்ததாக இந்திய ஊடகங்கள் இன்று (ஆகஸ்ட் 20) செய்திகள் வெளியிட்டுள்ளன.

டைம்ஸ் ஆஃப் இந்தியா (TOI) அறிக்கையின்படி, குடும்பத்தில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் ஆறு வயது மகன் ஆகியோர் இறந்து கிடந்தனர் என்றும் அவர்கள் கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இறந்த பெண் மற்றும் சிறுவன் ஆகியோர் இறந்து கிடந்த சூழல்களை கவனித்த பால்டிமோர் காவல்துறை இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். பால்டிமோர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட அவர் தற்கொலைக்கு முன்பு தனது மனைவி மற்றும் மகனை கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

TOI அறிக்கையின்படி, மூவரும் (அவரது மகன், மருமகள் மற்றும் பேரன்) தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக அவரது தாய் கூறினார். இறப்புக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதாகக் கூறிய தாய், கடந்த வாரம் தனது மகன் மற்றும் மருமகளிடம் பேசியதாகக் கூறினார்.

அவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருவதாகவும், அவரும் அவரது மனைவியும் மென்பொருள் பொறியாளர்களாக பணிபுரிந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உறவினர் தம்பதியினர் கூறும்போது, அவர்கள் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டதாகவும் மகிழ்ச்சியோடுதான் வாழ்ந்தார்கள் என்றும் கூறினார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் இப்போது இந்திய அதிகாரிகளை அணுகி இறந்தவரின் சடலத்தை இந்தியாவுக்கு அனுப்ப உதவியுள்ளனர். தாவணகெரே மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Updated On: 20 Aug 2023 7:18 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு