/* */

வடிவேலு காமெடி பாணியில், போலீசார் முன் 'குளித்து' வெறுப்பேற்றிய மாணவர்கள்

‘தண்ணீரை எங்க மேல பீய்ச்சி அடிச்சா, நாங்க பயந்து ஓடீடுவோமா? எடு அந்த ஷாம்பூ பாக்கெட்டை’ என, போலீசார் பீய்ச்சியடித்த தண்ணீரில், தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்து வெறுப்பேற்றி உள்ளனர், இலங்கை பல்கலைகழக மாணவர்கள்.

HIGHLIGHTS

வடிவேலு காமெடி பாணியில், போலீசார் முன் குளித்து வெறுப்பேற்றிய மாணவர்கள்
X

யாழ்ப்பாணத்தில், போலீசார் பீய்ச்சியடித்த தண்ணீரில் ஷாம்பு போட்டு குளித்த மாணவர்கள்.

மாணவர்களை விரட்ட வந்த போலீசார், இறுதியில் அவர்களை குளிப்பாட்டிய காமெடி சம்பவம் நடந்துள்ளது, கந்தசாமி படத்தில், நடிகர் வடிவேலு காமெடி காட்சி போன்று, யாழ்ப்பாணத்தில் இந்த ருசிகர சம்பவம் நடந்து அரங்கேறி உள்ளது.


கடந்த 2009ம் ஆண்டில், சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த படம் 'கந்தசாமி'. இந்த படத்தில், 'தேங்காய் கடை தேனப்பன்' என்ற கேரக்டரில் நடிகர் வடிவேலு நடித்திருப்பார். ஒரு காட்சியில், வடிவேலுவை போலீசார் பிடித்து, அவர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து விசாரணை நடத்துவர். அப்போது, தண்ணீரை பீய்ச்சி அடித்ததால் உடல் முழுவதும் நனைந்த வடிவேலு, அங்கேயே அமர்ந்து சோப்பு போட்டு குளித்து, அவர் அணிந்து இருந்த பனியனையும் கழட்டி துவைப்பார். அதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைவர். மேலும், இடுப்பில் லத்தியால் குத்தும் போலீசாரிடம் 'அப்படியே இருங்க, அப்படியே இருங்க, ரொம்ப நாளாக இருந்த கல்லடைப்பு, இப்பத்தான் சரியாகுது,' என்று கூறி, போலீசாரை வெறுப்பேற்றுவார்.

வடிவேலு நடித்த காமெடி காட்சிகளில் இந்த காட்சி, ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி காட்சியாக உள்ளது. இதே போன்ற ஒரு காட்சியைத்தான், இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை பல்கலைகழக மாணவர்களும் நிஜத்தில் நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.


தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்பதாக, யாழ்ப்பாணத்துக்கு, இலங்கை அதிபர் ரணில் விக்ரம் சிங், சென்றுள்ளார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை பல்கலைக்கழக ஒன்றிய மாணவர்களும், சில சிவில் சமூக அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அப்போது, போராட்டக்காரர்களை அப்பகுதியில் இருந்து விரட்டுவதற்காக, போலீசார் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.


அதனால், தலை மற்றும் உடல் பகுதி முழுவதும் நனைந்த சில மாணவர்கள், உடனே தங்களிடம் இருந்த ஷாம்பூ பாக்கெட்டை எடுத்து, பிரித்து தலை முழுவதும் ஷாம்பூவை தேய்க்க, நுரை கிளம்பியது. தலையில், ஷாம்பூ நுரையுடன் மீண்டும் போலீசார் முன்பு வந்து நின்று, தண்ணீரை தலையில் பீய்ச்சினால் தலைமுடியை கழுவி சுத்தப்படுத்திக்கொண்டனர்.


'போராட்டக்காரர்களை விரட்ட வந்தோமோ, இல்லை, அவர்களை குளிப்பாட்டி விட வந்தோமா' எனப் புரியாமல், போலீசார் அதிர்ச்சியடைந்து நின்றுள்ளனர். போலீசாரின் தடுமாற்றத்தை பார்த்து ரசித்த மாணவர்கள் தொடர்ந்து, ஷாம்பு நுரை தலையுடன் போலீசார் முன் நின்று மாணவர்கள் கலாய்க்கும். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பொதுவாக, இதுபோன்ற போராட்டங்கள் வழக்கமாக கொடியேந்தியபடி கோஷங்கள் எழுப்பும் போராட்டமாகவே இருக்கும். ஆனால், மாணவர்களின் இந்த ஷாம்பு போட்டு குளித்த நூதனமான போராட்டம், செம வைரலாகி விட்டது. இனிமேல், போராட்டக்காரர்கள் மீது, தண்ணீரை பீய்ச்சியடிக்க வேண்டும் என்றாலே, போலீசார் 'ரூம் போட்டு' யோசிக்க வேண்டிய நிலையை உருவாக்கி விட்டது.

Updated On: 20 Jan 2023 6:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி