/* */

கூகுள் doodle -ல் கொண்டாடிய இத்தாலிய பேராசிரியை

கூகுள் நிறுவனம் இத்தாலிய பேராசிரியை பிறந்தநாளில் அவரை இன்று doodle -ல்வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்த்துள்ளது.

HIGHLIGHTS

கூகுள் doodle -ல் கொண்டாடிய இத்தாலிய பேராசிரியை
X

கூகுள் வெளியிட்டுள்ள doodle 

இத்தாலிய பேராசிரியர், நூல் ஆசிரியர், சமூக ஆர்வலர் மற்றும் வானியற்பியல் துறை வல்லுநர் என்று பன்முகத்தன்மை கொண்ட மார்கெரிடா ஹாக்-க்கு 99வது பிறந்த நாள். (Margherita Hack).


கூகுள் இன்று அவரின் 99வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளது. உலகம் அதை அறியும் விதமாக கூகுளில் doodle வெளியிட்டு அவரது பெருமையை உணர்த்தியுள்ளது.

இன்றைய கூகுள் தேடுதல் பொறியினை அலங்கரிப்பவர் யார் தெரியுமா?

மார்கரிதா ஏக் (Margherita Hack), ஓர் இத்தாலிய வானியலாளரும் மக்கள் அறிவியல் எழுத்தாளரும் ஆவார். 1995 இல் கண்டுபிடித்த சிறுகோள் 8558 ஏக் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இவரது 99 வது பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் கூகுள் தனது தேடுதல் பொறியில் டூடுலாக வடிவமைத்துள்ளது.

இவர் சுவீடனைச் சேர்ந்த கணக்குவைப்பாளரும் சீர்திருத்தக் கிறித்தவரும் ஆகிய இராபெர்த்தோ ஏக் மகளாக 1922 ஜூன்12 ம் தேதி இத்தாலி புளோரன்சில் பிறந்தார். இவரது தாயார் மரியா உலூயிசா பொகேசி தசுக்கனியைச் சேர்ந்தவரும் கத்தோலிக்கரும் ஆவார். பொகேசி பிரான்சு பெல்லி கலைக் கல்விக்கழகத்தில் பட்டம் பெற்றவர். மேலும் இவர் உப்பிழி கலையரங்கில் நுண்பட ஓவியரும் ஆவார்.மார்கரிதா ஏக் புளோரன்ஸ் பல்கலைகழகத்தில் கல்வி பயின்றார்.

இவரது பெற்றோர் இருவரும் தம் குடும்பச் சமய நெறியைத் துறந்துவிட்டு இத்தாலிய இறையியல் கழகத்தில் இணைந்தனர். இவர் இந்தக் கழகத்தில் சிலகாலம் செயலாளராக இருந்தார். இளவரசர் காம்பெரினி காவல்லினி இக்கழகத்தின் தலைவர் ஆவார். மார்கரிதா ஏக் 2013 ம் ஆண்டு ஜூன் 29 ம் தேதி தனது 91 வது வயதில் மறைந்தார்.

இவர் பெற்ற விருதுகள்..தார்கா கியூசெப்பே பியாசி (Targa Giuseppe Piazzi) (1994)

பிரிமியோ இண்டர்னேழ்சனேல் கார்த்தினா யுலிசே (Premio Internazionale Cortina Ulisse) (1995)

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க மார்கரிதா ஏக் பிறந்த நாளில் அன்னாரை கூகுள் கௌரவித்துள்ளது.

Updated On: 12 Jun 2021 3:54 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  4. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  5. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  8. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  9. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  10. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு