தனது குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்ட எலன் மஸ்க்

Elon Musk Shared A Rare Pic Of His Son - தனது குழந்தையின் புகைப்படங்களை எலன் மஸ்க் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தனது குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்ட எலன் மஸ்க்
X

Elon Musk Shared A Rare Pic Of His Son - எலன் மஸ்க், தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.


rare photos of X Æ

ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), பேபால் (PayPal)[7] டெஸ்லா மோட்டார்ஸ், மற்றும் ஜிப் ஆகிய நிறுவனங்களின் ஆரம்ப கால முதலீட்டாளர் ஆவார். மஸ்க் அவற்றின் இணை நிறுவனர்களில் ஒருவரும் ஆவார். கடந்த ஆண்டு நிலவரப்படி, 169.1 பில்லியன் அமெரிக் டாலர்களுக்கும் அதிகமான நிகர மதிப்புடன் உலகின் இரண்டாவது பணக்காரராக உள்ளார்.

எலன் மஸ்க் தென்னாப்பிரிக்காவில் பிறந்வர். இவருடைய தந்தை பொறியாளர்; தாயார் மே மஸ்க் சத்துணவு நிபுணர். எலன் மஸ்க் 12வது வயதிலேயே கணினியில் ஈர்ப்புக் கொண்டு தம்முடைய வீடியோ விளையாட்டுக்கு, அவரே குறியீடுகள் எழுதி அதனை விற்று பணத்தை சம்பாதித்தவர்.


elon musk son photo

கனடாவில் ஒண்டாரியோ கிங்ஸ்டனில் உள்ள குவீன்ஸ் பல்கலைக் கழகத்திலும், பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார். பொருளியல் மற்றும் தெரியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டங்கள் பெற்றார். ஆய்வுகள் செய்து பட்டம் பெற கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால் படிப்பை அங்குத் தொடரவில்லை.

இதனைத்தொடர்ந்து, 1999ம் ஆண்டு பேபால் என்ற ஒரு நிதி நிறுவனத்தைத் தொடங்கினார். ஜிப்2 குழுமத்தைத் தொடங்கி அதனை விற்பனை செய்துவிட்டார். பின்னர் எக்ஸ் டாட் காம் என்ற குழுமத்தை தொடங்கினார்.


elon musk and son latest photos

2002ம் ஸ்பேஸ் எக்ஸ் என்ற குழுமத்தையும், 2003ல் டெஸ்லா மோட்டார்ஸ் என்ற குழுமத்தையும் தொடங்கினார். இதனைத்தொடர்ந்து கடந்த 2012 மே மாதத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு ராக்கெட்டை அனுப்பினார்.

வணிக நோக்கில் விண்வெளியில் சுற்றுலாப் பயணம் செய்ய விண்கலத்தை உருவாக்கி மனிதர்களை அனுப்புவதே ஸ்பேஸ் எக்சின் முகாமையான அலுவல் ஆகும். மேலும் செவ்வாய்க்கோளுக்கு மனிதர்களைக் குடியேற்ற வேண்டும். அது 2024 ஆம் ஆண்டில் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் எலன் மஸ்க்.

எலன் மஸ்கிற்கு தற்போது 10 குழந்தைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தன்னுடைய குழந்தைகளில் ஒருவரை, அவரின் குழந்தை படத்துடன் ஒப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது ஒரு குழந்தையின் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2023-03-18T20:37:00+05:30

Related News

Latest News

 1. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
 2. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 3. லைஃப்ஸ்டைல்
  oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
 4. டாக்டர் சார்
  அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
 5. சினிமா
  அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
 6. தொழில்நுட்பம்
  36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
 7. இராசிபுரம்
  ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
 8. தமிழ்நாடு
  சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
 9. விழுப்புரம்
  விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...
 10. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்