/* */

கால் பந்தாட்ட வீரரால் பெரும் இழப்பை சந்தித்த கோகோ கோலா நிறுவனம்

கால் பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் செயலால் கோகோ கோலா நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

HIGHLIGHTS

கால் பந்தாட்ட வீரரால் பெரும் இழப்பை சந்தித்த கோகோ கோலா நிறுவனம்
X

ரொனால்டோ, கோகோ கோலா பாட்டில்களை தள்ளிவிட்டு தண்ணீர் பாட்டிலை காட்டுகிறார்.

ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த பரபரப்புக்கிடையே இன்னொரு பரபரப்பு போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் ரொனால்டோவினால் பற்றிக்கொண்டிருக்கிறது.

இந்த தொடரில் போர்ச்சுகல் போட்டியின் முதல் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது ‛தண்ணீரை குடிங்க' என்று மேஜை மீது இருந்த கோகோ கோலா பாட்டிலை தள்ளி வைத்தார். இவாறு ஒரு பிரபல வீரர் செய்ததால் கோகோ கோலாநிறுவனத்திற்கு சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான மதிப்பு சரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு முன்னதாக கோகோ கோலா குளிர்பான பாட்டில்கள் இருப்பதைப்பார்த்த ரொனால்டோ, அந்த பாட்டில்களை தள்ளி வைத்துவிட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்து வைத்தார். ‛அகுவா' (போர்ச்சுக்கீசிய மொழியில் அகுவா என்றால் தண்ணீர் ஆகும் ) என்று கூறி குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீரை குடிக்கவேண்டும் என்பதை சைகையில் குறிப்பிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. கோகோ கோலா குளிர்பானத்தை பிரபல கால்பந்து வீரர் ஒருவர் தள்ளிவிட்டதால், அந்த நிறுவனத்திற்கு எதிரான விளம்பரமாக பரவியது. இதன் எதிரொலியாக, கோகோ கோலா நிறுவனத்திற்கு சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.29ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது.

Updated On: 16 Jun 2021 8:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்