/* */

புல்லட் ரயிலில் பயணித்தார் முதல்வர் ஸ்டாலின்: அனுபவம் பற்றி ட்விட்

ஜப்பான் சுற்றுப்பயணத்தின்போது புல்லட் ரயிலில் பயணித்த முதல்வர் ஸ்டாலின் புல்லட் ரயில் பயண அனுபவம் பற்றி ட்விட் செய்துள்ளார்.

HIGHLIGHTS

புல்லட் ரயிலில் பயணித்தார் முதல்வர் ஸ்டாலின்: அனுபவம் பற்றி ட்விட்
X

ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணித்தார் முதல்வர் ஸ்டாலின்.

புல்லட் ரயிலில் பயணித்துள்ள முதல்வர் ஸ்டாலின் புல்லட் ரயில் பயண அனுபவம் பற்றி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஒன்பது நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார். சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்த ஸ்டாலின் அந்த பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் நாட்டிற்கு சென்றார்.

ஜப்பான் நாட்டில் ஒசாகா நகரில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். தொழிற்சாலைகளையும் பார்வையிட்டார். ஜப்பான் தொழில் அதிபர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டவர் தொழில் அதிபர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் ஜப்பானில் வாழும் தமிழர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார் அந்த நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் டோக்கியோ நகருக்கு புல்லட் ரயிலில் தனது பயணத்தை மேற்கொண்டார். இதற்காக ரயில் நிலையம் சென்ற முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை அங்குள்ள அதிகாரிகளும் ஊழியர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மனைவி துர்கா உடன் புல்லட் ரயிலில் பயணம் செய்து டோக்கியோவை அடைந்தார்.

தனது புல்லட் ரயில் பயண அனுபவம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


அதில் புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ. தூரத்தை இரண்டரை மணி நேரத்திற்குள் அடைந்து விடுகிறோம். உருவ அமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர வேண்டும். ஏழை. எளிய. நடுத்தர மக்கள் பயனடைந்து அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 28 May 2023 11:55 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்