/* */

நம்பிக்கை வாக்கெடுப்பு; பிரதமர் ஜான்சன் தலைமையிலான அரசு வெற்றி

போரிஸ் ஜான்சன் தலைமையிலான இங்கிலாந்து அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது

HIGHLIGHTS

நம்பிக்கை வாக்கெடுப்பு; பிரதமர் ஜான்சன் தலைமையிலான அரசு வெற்றி
X

கடந்த 2019ம் ஆண்டு போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்று கொண்டார். அவரது அமைச்சரவை மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டதை தொடர்ந்து கடந்த 7ந்தேதி பிரதமர் பதவியில் இருந்து ஜான்சன் விலகினார். அவர் வகித்து வந்த கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகினார்.

கன்சர்வேட்டிவ் கட்சி அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் ஒரு தற்காலிகத் தலைவராக நியமிக்குமாறு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதனால், புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த சூழலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் கோரிக்கை விடுத்தது. எனினும், பிரதமர் அலுவலகம் இந்த வேண்டுகோளை நிராகரித்தது. .

எனினும், ஜான்சன் அவராக முன்வந்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைப்பு விடுத்தார். நேற்றிரவு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். அரசாங்கம் 349 க்கு 238 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

238 வாக்குகளை பெற்று வாக்கெடுப்பில் ஜான்சன் அரசு வெற்றி பெற்றது. இதனால், இங்கிலாந்தில் பொது தேர்தல் நடைபெறுவது தவிர்க்கப்பட்டு உள்ளது.

அதேநிலையில், இந்தியா வம்சாவளியான எம்.பி. ரிஷி சுனாக் 3வது சுற்றில் அதிக ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளார். உறுப்பினர் டாம் டுகெந்தத் வெளியேறியுள்ளார். இதனால், புதிய பிரதமர் தேர்தல் போட்டியில் ரிஷி சுனாக் உள்ளிட்ட 4 பேர் மீதமுள்ளனர்.

Updated On: 19 July 2022 4:33 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?