/* */

வாலுடன் பிறந்த பெண் குழந்தை; மெக்சிகோவில் இப்படி ஒரு அதிசயம்

மெக்சிகோ நாட்டில் பிறந்த பெண் குழந்தை, இடுப்பு பகுதியில் வாலுடன் பிறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வால் 2 இன்ச் நீளமும், முற்றிலும் முடி மற்றும் சதை கொண்டதாக காணப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வாலுடன் பிறந்த பெண் குழந்தை; மெக்சிகோவில் இப்படி ஒரு அதிசயம்
X

மெக்சிகோவில், வாலுடன் பிறந்த பெண் குழந்தையின் ‘வால்’ படம்.

குறும்பு செய்யும் குழந்தைங்களை பெற்றோரும், மற்றவர்களும் ' சரியான வாலு' ங்க என்று சொல்வதுண்டு. சேட்டை செய்யும் சிறுவர்களை அதட்டும் உறவினர்கள் கூட ' உனக்கு வாலு மட்டும்தான் இல்லை, எல்லா குறும்பும் செய்யறே?' என திட்டுவதும் உண்டு. டீன் ஏஜ் வயதினர் சிலர், தங்களது குரூப்புக்கு விளையாட்டாக 'வால் பசங்க' என, நிக் நேம் வைத்துக்கொள்வதுண்டு. தங்களது டூவீலர்களில் கூட, பின்பகுதியில் 'வால் பசங்க' என எழுதியிருப்பதை நாம் காணலாம்.

ஏனெனில், அந்த அளவுக்கு 'வால்' என்பது அதிக கவனத்தை பெறுகிறது. ஆதிகாலத்தில் பிறந்த மனிதனுக்கு நீளமான வால் இருந்ததாகவும், நாளடைவில் அது சுருங்கி, சுருங்கி தற்போது முதுகு தண்டுவடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது, அறிவியல் பூர்வமாக உண்மையாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் திரைப்படங்களில், நாடகங்களில் கூட விளையாட்டாக வால் முளைத்த, கொம்பு முளைத்த கதைகளும் கற்பனையாக உருவாக்கப்பட்டு நாம் ரசித்தது உண்டு.

ஆனால், பெண் குழந்தை ஒன்று மெக்சிக்கோவில் 2 இன்ச் நீளம் கொண்ட வாலுடன் பிறந்துள்ளது. இந்த 5.7 செ.மீ நீளம் கொண்ட வால் மிகவும் மிருதுவாக உள்ளது.

இது முற்றிலும் தோல் மற்றும் முடியால் உருவாகியுள்ளது. குரங்குகளுக்கு இருப்பதுபோன்ற தோற்றம் இந்த வாலிற்கு உள்ளது. இதுபோன்ற நிகழ்வு, இதுவரை 200 முறை மட்டுமே பதிவாகியுள்ளது. அதுவும் மெக்சிகோ நாட்டில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பிரசவத்தில் எந்த ஒரு தடையும் ஏற்படவில்லை. இந்த வால் ஒன்றை தவிர, அந்த குழந்தை மிகவும் ஆரோக்கியமாக பிறந்துள்ளது.

அந்த வால் குழந்தைக்கு, எந்த ஒரு வலியும் இல்லாமல் வால் அகற்றப்பட்டுள்ளது. வால் பகுதியில் ஒரு ஊசியால் குத்தியபோது அந்த குழந்தை அழுதுள்ளது. பிறகு இரண்டு மாதம் கழித்து, அந்த குழந்தையின் வால் ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு தற்போது குழந்தை நல்ல நிலையில் உள்ளது.

இதுவரை உலகில் 195 பேருக்கு மட்டுமே இவ்வாறு வால் இருந்துள்ளது. கரு உருவாகும்போது அந்த வால் உருவாகும் பின்னர் அது உள்ளே சென்றுவிடும். அப்படி உள்ளே செல்லாமல் இருப்பதால், இதுபோன்று நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

இது பெரும்பாலும் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே நடக்கும். 17 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இதனால் மூளை அல்லது மண்டை ஓடு வளர்ச்சி குறைபாடு ஏற்படுகிறது. இதற்கான காரணங்களை மருத்துவர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

வழக்கமாக கூடுதல் கால்களுடன், இரட்டை தலையுடன் ஆடுகள், மாடுகள் போன்ற கால்நடைகளை நாம் பார்த்திருக்கிறோம். இப்போது, வாலுடன் குழந்தை பிறக்கும் சம்பவங்களும் நம்மை ஆச்சரியப்படுத்தவே செய்கிறது. இந்த பூமி மட்டும் அதிசயம் அல்ல.. இதில் இதுபோன்ற அபூர்வ நிகழ்வுகளும் நமக்கு ஆச்சரியங்கள்தான்.

Updated On: 27 Nov 2022 7:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?