/* */

பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 14 குழந்தைகள் உட்பட 21பேர் பலியான சோகம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளிக்குள் புகுந்த இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 14 குழந்தைகள் உள்பட 21 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

HIGHLIGHTS

பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 14 குழந்தைகள் உட்பட 21பேர் பலியான சோகம்
X

துப்பாக்கிச்சூடு நடந்த பள்ளி முன்பு விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசார். 

அமெரிக்காவில் துப்பாக்கிச் கலாச்சாரம் மிகுதியாக உள்ளது. அங்கு பொதுவெளியில், அப்பாவி மக்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தொடக்கப்பள்ளியில் 14 குழந்தைகளை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம், உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், யுவால்டே கவுண்டி என்ற நகரில் தான், இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள சாண்டி ஹூக் என்ற உயர்நிலை பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், துப்பாக்கியால் கண்ணில்பட்டவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்த குழந்தைகள், பீதியுடன் தலைதெறிக்க நாலாபுறமும் ஓடினர். எனினும் இந்த துயர சம்பவத்தில், 14 குழந்தைகள் உள்பட, 21, பேர் உயிரிழந்தனர். பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படித்து வரும் சூழலில், துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து பெற்றோர் பள்ளிக்கு விரைந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இதனிடையே, துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்றனர். அவருக்கு 18 வயது இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 25 May 2022 1:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!