/* */

சென்னைக்கு மீண்டும் மழை அச்சுறுத்தல்: நவ. 17, 18ல் கனமழைக்கு வாய்ப்பு

வரும் 17, 18 தேதிகளில், சென்னை, வட தமிழகம் மற்றும் கடலோர பகுதியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சென்னைக்கு மீண்டும் மழை அச்சுறுத்தல்: நவ. 17, 18ல் கனமழைக்கு வாய்ப்பு
X

இது தொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில், செய்தியாளர்களிடம் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியதாவது:

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வருகிற நவம்பர் 18ஆம் தேதி, தெற்கு ஆந்திர மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளை நெருங்கும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், நாளை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

தென்கிழக்கு அரபிக் கடலுக்கும், தென்மேற்கு வங்கக் கடலுக்கும் இடையில், வடக்கு கேரளா வடதமிழகம் ஒட்டியுள்ள பகுதியில் காற்று திசை மாறும் பகுதி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வளவனூர் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வரும் 15, 16 தேதிகளில் தமிழகம் புதுவையில் பொதுவாக பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு நீலகிரி கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை,திருவண்ணாமலை திருவள்ளூர், விழுப்புரம், கரூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய கூடும்.

நவம்பர் 17, 18 தேதிகளில், வங்கக்கடலில் இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக பகுதிகளில் நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும். கனமழை பொறுத்தவரை வடக்கு மற்றும் வட தமிழக கடற்கரை மற்றும் உள் மாவட்டங்களில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த இரண்டு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பர் 17 18 தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.

Updated On: 15 Nov 2021 12:04 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!