/* */

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம்

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தின் 15  மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம்
X

வானிலை மைய வரைபடம்

கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (23.09.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை (24.09.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26.09.2023 முதல் 29.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 Sep 2023 8:08 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  2. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  3. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  4. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  5. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  6. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  9. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  10. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...