மேஷம் vs தனுசு ராசிக்கு இடையிலான பொருத்தம், திருமணம், நட்பு மற்றும் நம்பிக்கை எப்படி இருக்கும்?

அந்தவகையில், செவ்வாய் ஆளும் மேஷம் மற்றும் குரு ஆளும் தனுசு ராசிகளுக்கு இடையேயான பொருத்தம், திருமணம், நட்பு மற்றும் நம்பிக்கை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
​மேஷம் மற்றும் தனுசு ராசிப் பொருத்தம்
கால சக்கரத்தில் முதல் ராசி மேஷம். இது செவ்வாய் ஆளக்கூடிய நெருப்பு ராசி. தைரியம், ஆளுமை, கோவம் மற்றும் வேகம் உடையவர்கள். இவர்களுக்கு சட்டென கோவம் வரும். சிந்திக்காமல் செயலில் குதிப்பவர்கள்.
எதையும் மனதில் வைக்காமல் வெட்ட வெளிச்சமாக தைரியமாக பேசக்கூடிய ராசிக்காரர்கள். மேஷம் இயல்பாகவே ஒரு அதிரடியான வேகம் பொருந்திய ராசி. நெருப்பை போல சுடும் குணம் உடையவர்கள். தான் செய்வது தான் சரி என ஒற்றை காலில் நிற்பவர்கள்.
காலசக்கத்தில் 9 ஆவது ராசியான குரு ஆளும் தனுசு ஒரு நெருப்பு ராசி. தனுசு ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலியானவர்கள். சிந்தித்து செயல்படக்கூடியவர்கள். அனைத்து விஷயத்திலும் சிறந்து விளங்கும் அறிவாளிகள்.
மற்றவர்களை மோட்டிவேட் செய்பவர்களாக இருப்பார்கள். பாரம்பரியத்தை விரும்புபவர்கள். புதுமைகளை விரும்பினாலும் பழமைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் உடையவர்கள். மற்றவர்களை புரிந்து கொள்ளும் வல்லமை உடையவர்கள்.
மேஷம் மற்றும் தனுசு ராசிப் பொருத்தம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது அதிகமாக இருக்கும். இவர்களின் வாழ்க்கையில் பிரச்சனை மற்றும் தோல்விகள் குறைவாக இருக்கும்.
இவர்களுக்கு இடையில் அனைத்தும் இணக்கமாக இருக்கும். கோவமானவர்களை தனது அன்பால் அமைதியாகி அரவணைக்கும் தனுசு ராசிக்காரகள் மேஷத்திற்கு எல்லாவிதத்திலும் பொருத்தமாக இருப்பார்கள்.
​மேஷம் மற்றும் தனுசு திருமண உறவு
இவர்கள் இருவருக்குமான திருமணப்பொருத்தம் நன்றாக இருக்கும். சேவையை, குரு, சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒரே அணியாக இருப்பதால் மேஷம் மற்றும் தனுசுக்கு இடையிலான திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
ஏனென்றால், இவர்களுக்கு இடையிலான புரிதல் மற்றும் இருவருக்கும் இடையில் நல்ல இணக்கம் இருக்கும். யாருக்கும் அடங்காத மேஷம் தனுசுக்கு, அதாவது குருவுக்கு அடங்கி பொறுமையாக போவதால், திருமண வாழ்க்கையானது அன்பு நிறைந்ததாக இருக்கும்.
தனுசு நல்ல அடக்கி ஆளும் குணம் கொண்டவர்கள். பொறுமை இல்லாத மேஷம், தனுஷின் பேச்சை கேட்டு நடந்தால் இவர்களின் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள்.
இருவரும் வேகமும் விவேகமும் பொருந்திய புத்திசாலிகள். தனுஷின் அறிவுரையை கேட்டு நடந்தால் மேஷ ராசிக்காரர்கள் எல்லா செயலிலும் வெற்றி பெறுவார்கள். அவர்களுக்கு எதை எப்படி செய்ய வேண்டும் என நன்றாக தெரிந்திருக்கும்.
​மேஷம் - தனுசு நம்பிக்கை மற்றும் நட்பு
மேஷம் மற்றும் தனுசு ராசிகளுக்கு இடையிலான நம்பிக்கை மற்றும் நட்பு சிறப்பாக இருக்கும். ஏனென்றால், இருவரும் நேர்மையை அதிகம் விரும்புபவர்கள்.
இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள அதிகம் பேச வேண்டியதில்லை, மற்றவர் பொய் சொல்லும்போது எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.
பெரும்பாலான சூழ்நிலைகளில் மேஷ ராசிக்காரர்கள் தனுசு ராசிக்காரர்களுடன் எதையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.
தங்கள் உறவின் தீவிரம் மற்றும் ஆழம் குறித்து வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தால் இவர்களுக்கு பிரச்சனை தோன்றும்.
தனுசு ராசிக்காரர்கள் மேஷத்தை மிதமாக பார்ப்பதால், அவர்களை எளிதாக ஏமாற்ற முடியும். ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவு.
இருவருக்கும் சாகசம் பிடிப்பதால், இவர்களுக்கு இடையிலான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். இவர்கள் இருவரும் சலிப்படைய மாட்டார்கள்.
மேஷம் சற்று கோவப்படுபவராக இருந்தாலும், அனைத்தையும் தனுசு அனுசரித்து போகும் பொறுமை உடையது. தனது நட்புக்கும் நம்பிக்கைக்கும் உண்மையாக இருப்பது தனுசு.