மகரம் முதல் மீனம் ராசி வரையிலான 2023 ராசி பலன்கள்

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு உங்களுக்கு சாதகமான பலன்கள் நிறைந்த நல்ல ஆண்டாக அமைய இருக்கிறது. இழுப்பறியில் இருந்து வந்த சுபகாரியம் முயற்சிகளில் வெற்றிகள் பல குவிய போகிறது. மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமையும்.
குடும்ப வழக்குகளில் வெற்றி காண்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் படிப்படியான ஏற்றத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஒரே அடியாக அகல கால் வைத்து மேலே செல்ல முயற்சிக்காதீர்கள் படிப்படியாக கால் வைத்து மெல்லமாக ஏறுங்கள். கல்வியில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் சற்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் பாத சனியால் கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம் கவனமுடன் இருப்பது நல்லது. பரிகாரமாக சனிக்கிழமைகளில் சனி பகவானை தொழுது வாருங்கள்.
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு ஜென்ம சனியில் இருந்து மீள முடியாவிட்டாலும் உங்களுடைய அயராத உழைப்பால் விண்ணை எட்டும் வெற்றியை காண இருக்கிறீர்கள். எதிலும் அலட்சியம் காட்டாமல் தொடர்ந்து உங்களுடைய 100 சதவீத உழைப்பை கொடுத்து வாருங்கள் நன்மைகள் அதிகரிக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே வீண் சந்தேகங்களை தவிர்ப்பது நல்லது இல்லை என்றால் விரிசல் விழும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை ஏற்பட்ட நஷ்டங்களுக்கு ஈடு கட்டும் விதமாக லாபம் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல நேரம் பிறந்து விட்டது என்றே நினைத்துக் கொள்ளுங்கள்.
மேற்படிப்பு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் இருப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும் பயப்பட வேண்டாம். பரிகாரமாக அனுமனுக்கு வெற்றிலை மாலை போட்டு, வெண்ணை சாட்சி வழிபட்டு வாருங்கள்.
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு நற்பலன்கள் அதிகரிக்கக் கூடிய நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. இதுவரை இருந்து வந்த மன கவலைகள் அகன்று மகிழ்ச்சி அதிகரிக்க துவங்கும். குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் அடங்கும். வீண் வம்பு, வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள்.
கணவன் மனைவிக்கு இடையே புதிய புரிதல் உதிக்கத் துவங்கும். ஆச்சரிய படத்தக்க விஷயங்கள் எல்லாம் நடக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயங்களில் எச்சரிக்கை தேவை.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய அனுபவங்கள் பல பாடங்களை கற்பிக்கும், ஏற்கனவே செய்த தவறை மீண்டும் செய்யாமல் இருங்கள். வெளிநாடு செல்லக்கூடிய உங்களுடைய கனவு நிறைவேறும்.
உயர்கல்வி பயில நினைப்பவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் திட்டமிட்டபடி நடக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள் இல்லை என்றால் பல பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பரிகாரமாக நவகிரக வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.