துலாம் முதல் தனுசு ராசி வரையிலான 2023 ராசி பலன்கள்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு இதுவரை உங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த அர்த்தஷ்டம சனி முடிவுக்கு வரும் என்பதால் சுபயோக பலன்கள் கை கூடி வரக்கூடிய இனிமையான ஆண்டாக இருக்கப் போகிறது.
குடும்பத்தில் கெட்டி மேளம் கொட்டும் சத்தம் கேட்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார நிலை திடீரென ஏறிக்கொண்டே செல்லும் இதனால் லாபத்திற்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைகள் பல வந்தாலும் அதனை தகர்த்து எறிந்து உங்களுடைய திறமைக்கு உரிய பலன்களை அனுபவிக்க இருக்கிறீர்கள்.
உயர்கல்விக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கை கூடி வரும். குடும்பத்தில் இருந்து வந்த குறைகள் அகன்று குதூகலம் பிறக்கும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். பரிகாரமாக செவ்வாய் வெள்ளியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டு வாருங்கள் நன்மைகள் பிறக்கும்.
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இவ்வாண்டு மகிழ்ச்சி நிறைந்த நல்ல ஆண்டாக இருக்க போவதால் வரவேற்க காத்திருங்கள். இதுவரை பட்ட துன்பத்திற்கெல்லாம் நற்பலன் காணக்கூடிய யோகம் வரப் போகிறது. மனதில் ஒரு விதமான நிம்மதி குடிகொள்ளும்.
கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த வெறுப்புகள் மறைந்து அன்னோன்யம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் மனம் போன போக்கில் செல்லாமல் புத்தியுடன் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வந்தாலும் சுபச் செலவாக அமையும். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களுக்கு எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காண்பிப்பது நல்லது. பரிகாரமாக சிவ வழிபாடு செய்து வாருங்கள், பிரதோஷத்தில் கலந்து கொள்ளுங்கள் நன்மைகள் நடக்கும்.
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு தரித்திரங்கள் ஒழிந்து பல சரித்திரங்களை படைக்க கூடிய அற்புதமான ஆண்டாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் மறைந்து சிரிப்பு சத்தம் அதிகம் கேட்கக் கூடிய நல்ல அமைப்பாக அமைந்திருக்கிறது.
தம்பதியர் இடையே ஒற்றுமை வலுப்பெறும். குரு பலன் அமைந்திருப்பதால் சுப காரியங்களும் களைகட்ட போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஏழரை சனி முடியப் போவதால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை குறைவில்லாமல் லாபமாக அனுபவிப்பீர்கள்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும் உங்களுடைய முன்னேற்றத்தில் ஏற்றம் இருக்கும். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் சிறந்த ஒன்றை தேர்வு செய்யுங்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
ஆரோக்கியத்தில் அவ்வப்பொழுது சோர்வு தட்டும் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். பரிகாரமாக தட்சிணாமூர்த்தி, குரு பகவான் வழிபாடு மேற்கொண்டு வாருங்கள் நன்மைகள் நடக்கும்.