மேஷம் முதல் மிதுனம் ராசி வரையிலான 2023 ராசி பலன்கள்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு பற்பல நற்பலன்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய நல்ல ஆண்டாக உங்களுக்கு அமைந்திருக்கிறது. உங்கள் ராசியில் பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டில் திருமண யோகங்கள் கைகூடி வர இருக்கிறது.
ஆண்டின் துவக்கத்திலேயே சரிந்திருந்த பொருளாதாரம் ஏற்றம் காண ஆரம்பிக்கும். சுய தொழிலில் சனி லாபம் தரக் கூடியதால் திடீர் லாபம், பெரிய மனிதர்களுடைய தொடர்பு எண்ணிப் பார்க்காத அளவிற்கு இருக்கப் போகிறது.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆண்டின் மத்திம பகுதியில் இருந்து புதிய மாற்றங்கள் நிகழ்வதால் அனுகூல பலன்களை பெறுவீர்கள். வெளிநாடு செல்ல வேண்டும் என்கிற உங்களுடைய கனவை நிறைவேற்றிக் கொள்ளும் அதிர்ஷ்டம் உண்டாகும்.
கல்வி விஷயத்தில் தடைகள் வரலாம் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. தம்பதியர் இடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகளை மனதார பேசி தீர்த்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் எந்த மாற்றமும் இருக்காது, இருக்கக்கூடிய பிரச்சனைகளை அக்கறையுடன் சரி செய்ய பாருங்கள். பரிகாரமாக முருகனின் அறுபடை வீடுகளையும் தரிசிப்பது நல்லது.
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு ராசி அதிபதி சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். சுப பேச்சு வார்த்தைகள் நிகழும். தம்பதியர் இடையே இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் மறையும்.
பொருளாதார ரீதியான முன்னேற்றம் படிப்படியாக உயர தொடங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நிதானமும், விழிப்புணர்வும் அதிகம் தேவைப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தலைவலியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
குழந்தைகளின் கல்வி விஷயத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர், வெளிநாடு செல்வதில் இருந்து வந்த தடைகள் விலகும். ஆரோக்கியத்தில் இன்னும் அலட்சியமாக இருக்கக் கூடாது. பரிகாரமாக கோவில்களுக்கு விளக்கு ஏற்ற நெய் தானம் செய்து வாருங்கள்.
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு நீங்கள் நினைத்தபடி உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் தீரக்கூடிய அற்புதமான பலன்களை கொடுக்கக் கூடிய ஆண்டாக இருக்கிறது. குடும்பத்தில் பிரிந்தவர்கள் சேர்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபங்கள் வந்து குவிய இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஆசைப்பட்டபடி ஆண்டின் இறுதிக்குள் பதவி உயர்வு அடைவீர்கள். பொருளாதாரம் உயர்ந்து கை நிறைய பணம் புழங்கும்.
மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்பவர்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள் உண்டு. தள்ளிக் கொண்டே சென்ற திருமண யோகம் உங்களை தேடி வரும். ஆரோக்கியத்தில் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள் கவனமாக இருப்பது நல்லது. பரிகாரமாக சங்கடங்கள் தீர்க்கும் விக்னேஸ்வரரை விரதம் இருந்து வழிபட்டு வாருங்கள்.