வர டிசம்பர்ல நாம எதிர் பாத்த அந்த படமும் ரிலீஸா? அவதார் 2 பட்ஜெட் இவ்ளோவா!

தற்போது நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என கூறப்படுக்கிறது.
கிருஷ்ணா இயக்கத்தில் கௌதம் மேனன், கலையரசன், பிரியா பவானி ஆகியோர் நடித்துள்ள பத்து தல படத்தில் சிம்பு அடுத்து நடிக்கிறார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அவதார் படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றது. "அவதார்: தி வே ஆஃப் வாட்டர்" என்று அழைக்கப்படும் இப்படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியா பவானி நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் சிவ நிர்வாணா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதன் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.