நீங்க பண்ண வரைக்குமே போதும்! நல்லா இருங்க

விஜய் டிவியில் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரிலிருந்து ரச்சிதா விலகிய பிறகு, இந்தத் தொடரில்தான் நாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், தற்போது இந்தத் தொடர் விரைவிலேயே முடிவடையப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது சொல்ல மறந்த கதை' தொடரின் 'சாதனா' கதாபாத்திரம் இப்படியாக முடிவடையும் என நான் எதிர்பார்க்கவில்லை. வாழ்த்துகள் கலர்ஸ் தமிழ்... நல்ல கருத்துள்ள சீரியலை முடித்ததற்காக வாழ்த்துகள்!
இந்த புராஜக்ட் செலக்ட் பண்ணாதீங்கன்னு சொல்லி என்னைப் பார்த்து சிரித்த எல்லாரையும் திட்டி இதில் கமிட்டானேன். இன்றைக்கு கலர்ஸ் தமிழ் மக்கள் நான்தான் தப்பான முடிவெடுத்திருக்கேன்னு நிரூபிச்சிட்டீங்க... இதற்காக வெட்கப்படுறேன்!
நீங்க பண்ண வரைக்குமே போதும்! நல்லா இருங்க! இப்ப முடிஞ்சிருக்கவே அவசியமில்லாத தொடரை நீங்க வெற்றிகரமா முடிச்சு வைச்சிட்டீங்க...
இது குறித்து கலர்ஸ் தமிழ் சேனல் தரப்பிலிருந்து இன்னும் எந்த விளக்கமும் வெளியாகவில்லை.