/* */

பெண்களுக்கு இனிமேல்...அந்த "மூனு நாள்" அவஸ்தை நோ..!: ஆமாங்க...மூலிகை நாப்கின்கள் வந்திடுச்சி..!!

பெண்களின் அந்த "மூனு நாள்" அவஸ்தைக்கு மூலிகை நாப்கின்கள் தீர்வு அளிக்கும் என்கிறார், கோவையின் குட்டி தொழில் முனைவோர் "பிரீஸ்சி" பானுமதி.

HIGHLIGHTS

பெண்களுக்கு இனிமேல்...அந்த மூனு நாள் அவஸ்தை நோ..!: ஆமாங்க...மூலிகை நாப்கின்கள் வந்திடுச்சி..!!
X
பெண்களின் மாதவிடாய் அவஸ்தையை தீர்வு அளிக்கும் பிரீஸ்சி - மூலிகை நாப்கின்கள்.

சுதந்திர வானில் சிறுமிகளாக சிறகடித்து பறக்கும் பெண் இனத்திற்கு பூப்பெய்த நொடி முதலே, இந்த பிரச்னை தொடங்கி விடுகிறது. குறிப்பாக காவல்துறை மற்றும் அரசு பணிகளில் இருக்கும் மகளிர் வேதனை சொல்லில் அடங்காது. சாலையில் முக்கிய பிரமுகர் செல்கிறார் என்றால் மணி கணக்கில் பாதுகாப்பு பணிக்கு நின்றிருக்கும் மகளிர் காவலர், சிறுநீர் கழிக்க மறைவிடம் தேடுவது, மாதவிடாய் நிகழ்ந்து விட்டால் சொல்ல முடியாமல் தவிப்பது அப்பப்பா... பெரும் அவஸ்தை தான்.

மாதவிடாய் சுகாதாரம் என்பது மனிதகுலத்தைப் போலவே பழமையான ஒரு நிகழ்வாகும். மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கை திட்டமிட்ட ஒரு விதிவிலக்கான நிகழ்வு. மாதவிடாய் தொடங்கியதில் இருந்து மாதவிடாய் நிறுத்தம் வரை சில இனப்பெருக்க மாற்றங்களுக்கு உள்ளாகும் ஒரு முக்கிய கால கட்டமாகும்.

மாதவிடாய் என்பது இயற்கையான செயல்முறையாக இருந்தாலும், இது சமூகத்தில் உள்ள பல கருத்துக்கள் மற்றும் நடைமுறைகளுடன் இணைத்தே பார்க்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் சுகாதாரம் என்பது பெண்ணின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. இது பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுடன் தொடர்புடையது.

அதனால் கவனக்குறைவாக செயல்பட்டால், இனப்பெருக்க பாதை நோய்த்தொற்றுகள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் போன்ற‌ பாதிப்புகளுக்கு பெண்கள் உள்ளாக நேரிடலாம். அக்காலத்தில் மாதவிடாய் சமயத்தில் பெண்கள் சுத்தமான பருத்தி துணிகளை உபயோகித்து வந்தனர். ஆனால் இன்றைக்கு நவீன கால மாற்றத்திற்கு ஏற்றவாறுவணிக ரீதியாக கிடைக்கும் ரசாயனம் மற்றும் ஆரோக்கியமற்ற குறைந்த விலை நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர்.

பொதுவாக இது, தீங்கற்றதாகத் தோன்றலாம் ஆனால் அவற்றில் டையாக்ஸின்கள், பெட்ரோ கெமிக்கல்கள், செயற்கை வாசனை திரவியங்கள் போன்ற வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, நீர்க்கட்டிகள், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், எரிச்சல், துர்நாற்றம் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பல கர்ப்பப்பை வாய் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். ஒவ்வொரு நாப்கினையும் 5 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டியது மிக அவசியம் என்பது எல்லாம் எத்துணை பெண்களுக்கு தெரியும்?

இதற்கு தீர்வாக, தற்போது மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை சானிட்டரி நாப்கின்கள் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பெண்களின் அந்த மூனு நாள் பிரச்னைக்கு மூலிகை நாப்கின்கள் தரும் தீர்வு குறித்து கோவை சாய் சனா புரொடக்ட்ஸ் பிரீஸ்சி நிறுவன உரிமையாளர் பானுமதி அளித்த சிறப்பு பேட்டி: எங்கள் சாய் சனா தயாரிப்புகள் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் மூலிகை நாப்கின்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதில் வேம்பு, காற்றாலை, துளசி போன்ற மூலிகை பொருட்கள் சேர்க்கப் படுகின்றன. மிகச் சுத்தமான ரசாயனம் மூலம் வெளுக்கப்படாத பஞ்சுகள் கொன்டு உருவாக்கப்படுகிறது.

எங்களது தயாரிப்புகள் மக்கும் மற்றும் மூலப்பொருட்களுக்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தர சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. நாங்கள் பெண்களுக்காக , ஆரோக்கியமான மற்றும் மூலிகை நாப்கின்களை தயாரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். எங்களது தயாரிப்புகளில் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதில்லை. மூலிகை நாப்கின்கள் துர்நாற்றத்தை நீக்குகிறது. மிகவும் மென்மையானது மற்றும் மாதவிடாய் காலங்களில் எரிச்சலை தடுக்கிறது.

மூலிகை நாப்கின்கள் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு வலுப்படுத்தவும் அரிப்பு மற்றும் தோல் அழற்சியிலிருந்து பாதுகாக்கவும் பாக்டீரியாவை அகற்றவும் மன அழுத்தத்தை குறைக்கவும் மாதவிடாய் சமயங்களில் ஏற்படுமீ சோர்வை நீக்கவும் உதவுகின்றன. மூலிகை நாப்கின்கள் L, XL, XXL, XXXL போன்ற அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன.

எங்களது நோக்கம் பெண்களுக்கு சுத்தமான நிம்மதியான ஆரோக்கியமான வழியில் மாதவிடாய் காலங்களை கடப்பதற்கு உதவுவதே. மேலும் பல பெண் தொழ்ல் முனைவோர்களை உருவாக்குவது எங்களது இலட்சியம். அதுமட்டுமல்ல, எங்கள் தயாரிப்புகளை விற்பதன் மூலம் அல்லது ரீபிராண்ட் செய்வதன் மூலம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம். மேலும் தொழில் பயிற்சிகளும் அளிக்கிறோம். இவ்வாறு, கோவை அண்ணாநகரை சேர்ந்த சாய் சனா புரொடக்ட்ஸ் பிரீஸ்சி (BREEZY) நிறுவன உரிமையாளர் பானுமதி குறிப்பிட்டார்.

பெண்களுக்கு இனி அந்த மூனு நாட்கள் அவஸ்தை இருக்காது என்றே நாம் நம்பலாம். ஏன்னா.... இருக்கவே இருக்கு மூலிகை நாப்கின்கள். இனிமே அந்த கவலை வேண்டாம்...!

Updated On: 9 Jun 2022 7:25 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!