/* */

சந்திரமுகி-2 படத்தின் இயக்குநர் வாசுவிடம் வாழ்த்து பெற்ற நடிகர் ரவி மரியா புகைப்படம் வைரல்

சந்திரமுகி-2 படத்தின் இயக்குநர் வாசுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் ரவி மரியா நெகிழ்ச்சி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.

HIGHLIGHTS

சந்திரமுகி-2 படத்தின் இயக்குநர் வாசுவிடம் வாழ்த்து பெற்ற நடிகர் ரவி மரியா புகைப்படம் வைரல்
X

இயக்குனர் பி.வாசுவை சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய ரவி மரியா.

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் சந்திரமுகி 2படத்தில் நடிகர் ரவி மரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதனையொட்டி மரியாதை நிமித்தமாக இயக்குநர் வாசுவை நன்றி கூறும் விதமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பு நிகழ்வின் புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இதனை கண்ட நெட்டிசன்கள் நன்றி கூறும் பழக்கம் நடிகர் நடிகைகளிடம் அரிதாக காணப்படும் நிலையில் நன்றி மறவாமல் தான் நடிக்கப்போகும் படத்தின் இயக்குநர் நேரில் சந்தித்து நன்றி கூறி ஆசி பெறும் பழக்கம் ரவிமரியா போன்று ஒரு சிலரையே காண முடிவதாக சமூக வலை தளங்களில் கருத்து தெரிவித்து நெட்டிசன்கள் மெச்சுகின்றனர்.

பொதுவாக தமிழ்த்திரை உலகில் கலையை மதிக்கும் உணர்வும், அனைவரிடமும் சகஜமாக பழகும் எளிமையும் ஒரு சில நடிகர்களிடமே காண முடிகிறது. குறிப்பாக நன்றி உணர்வும் இருப்பது அதிசயம். அந்த வகையில் நடிகர் ரவி மரியா இந்த மூன்று பண்புகளையுமே கொண்டு இருப்பது வியப்புக்கு உரியது என, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு நடிகர் ரவிமரியா குணத்தை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Updated On: 8 July 2022 9:09 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  3. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  5. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  6. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  7. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  8. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  9. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  10. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!