summer tour in tamilnadu-குறைந்த செலவில் குழந்தைகளுடன் குதூகல கோடை டூர்..! எங்கே போகலாம்..? பாருங்க..!
summer tour in tamilnadu-கோடை சுற்றுலா எங்கே திட்டமிட்டுள்ளீர்கள்? இன்னும் இல்லையெனில் இந்த இடங்களை கண்டு ரசிக்க முயற்சி செய்யுங்கள்.
HIGHLIGHTS

summer tour in tamilnadu-கோத்தகிரி ரங்கசாமி மலை (கோப்பு படம்)
summer tour in tamilnadu-கோடை காலம் வருகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டவுடன் குழந்தைகள் கோடையை குதூகலிக்க எங்காவது டூர் போகலாம் என்று பெற்றோரை நச்சரிப்பார்கள். அப்படி குழந்தைகள் நச்சரிக்கும் பல நடுத்தர பெற்றோருக்கு பட்ஜெட் குறித்த கவலை எழுவதில் தவறு ஒன்றும் இல்லை.
ஆனாலும் குழந்தைகளின் மகிழ்ச்சி என்று வரும்போது அதற்கு விலை மதிப்பீடு செய்வது சரியானதும் அல்ல. அதனால், தமிழ்நாட்டில் பலரும் அறியாத அல்லது சிலருக்கு மட்டுமே தெரிந்த சுற்றுலா தலங்கள் உள்ளன. அருமையான சுற்றுலா தலங்கள் குறைவான செலவில் சென்றுவர எதுவாக உங்களுக்கு வழிகாட்டுகிறது இன்ஸ்டாநியூஸ் செய்தி தளம்.
சிலருக்கு மட்டுமே தெரிந்த சில இடங்களை இங்கு தருகின்றோம்:
தமிழ்நாட்டின் 7 சிறந்த அசாதாரணமான (ஆஃப்பீட்) இடங்கள்
- கோத்தகிரி - நீலகிரி மாவட்டம்
- வால்பாறை- கோவை மாவட்டம்
- தேனி - தேனி மாவட்டம்
- ஜவ்வாது மலைகள் - வேலூர் , திருவண்ணாமலை மாவட்டங்கள்
- தரங்கம்பாடி - மயிலாடுதுறை மாவட்டம்
- சிறுமலை -திண்டுக்கல் மாவட்டம்
- பொள்ளாச்சி- கோவை மாவட்டம்
I கோத்தகிரி
முதலில் கோத்தகிரி பகுதியில் சுற்றிப்பார்க்கவேண்டிய இடங்கள் குறித்து பார்க்கலாம்.
கோயமுத்தூர் மாவட்டத்திற்கு மேற்கேயுள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து சரியாக 35 கி.மீ. தொலைவில் உள்ள மலைநகரம் கோத்தகிரி ஆகும். நீலகிரி மாவட்டத்தின் ஒரு தனி தாலுகாவாகும். கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிட நகரமும், முதல்நிலை பேரூராட்சியும் ஆகும்.
summer tour in tamilnadu
1. கொடநாடு வியூவ் பாயிண்ட்
2. கேத்தரின் வாட்டர் பால்ஸ்
3. ரங்கசாமி மலை மற்றும் தூண்
4. லாங்வுட் சோலை
5. ஜான் சல்லிவன் நினைவிடம்
6.எல்க் பால்ஸ்
7.நேரு பூங்கா மற்றும் ஸ்ரீ அருள்மிகு கருமாரியம்மன் கோவில் போன்றவைகளை கண்டு ரசிக்கலாம். குறைந்த செலவில் தாங்கும் ரெசார்ட்டுகளும் உள்ளன.
II வால்பாறை
வால்பாறை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ள நகராட்சி ஆகும்
1. ஆழியாறு அணை
2. பாலாஜி கோவில்
3. நல்லமுடி வியூவ் பாயிண்ட்
4. சோலையார் அணை
5. லோம்ஸ் வியூவ் பாயிண்ட்
6. இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா
7. கூழாங்கல் ஆறு
8. புல்வெளி மலை
9. காரமலை அன்னை வேளாங்கண்ணி ஆலயம்
10.சின்னக்கல்லார் பால்ஸ்
11. சித்தி விநாயகர் கோவில்
12.நீரார் அணை
வால்பாறையில் குறைந்த செலவில் தங்குவதற்கு ஓட்டல்கள் மற்றும் ரெசார்ட்டுகளும் உள்ளன.
summer tour in tamilnadu
III. தேனி
தேனி மாவட்டம், சிறந்த சுற்றுலா தலமாகவும், தேனி அந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகவும் உள்ளது.
1. மேகமலை
2. மேகமலை வனவிலங்கு சரணாலயம்
3.டாப் ஸ்டேஷன் வியூவ் பாயிண்ட்
4.கும்பக்கரை அருவி
5.குச்சனுர் சனீஸ்வரர் ஆலயம்
6. சுருளி அருவி
7. கௌமாரிஅம்மன் ஆலயம்
8. ஸ்ரீ சுவாமி சித்பவானந்த ஆசிரமம்
9. சேரன்ஸ் கேளிக்கை பூங்கா
10. குரங்கணி மலை
11. டைகர் பால்ஸ்
12.கோடி லிங்கம் ஆலயம்
13. எலிவால் பால்ஸ்
போன்றவைகளை காணலாம். இங்கும் தேனியைச் சுற்றிலும் தங்குவதற்கு ரெசார்ட்டுகள் உள்ளன.
மற்ற சுற்றுலா தலங்களான ஜவ்வாது மலைகள், தரங்கம்பாடி, சிறுமலை, பொள்ளாச்சி போன்றவைகளை அடுத்த கட்டுரையில் காண்போம்.
உங்கள் குழந்தைகளை மகிழ்விக்க இந்த இடங்களை கண்டு ரசித்து இயற்கையோடு பயணம் செய்யுங்கள். குறைந்தபட்ஷமாக 2நாட்கள் சுற்றுலாவுக்கு ரூ.இருபதாயிரம் செலவாகும். இது உத்தேசமானது. நான்கு பேருக்கு போக்குவரத்து, சாப்பாடு, தங்கல் மற்றும் இதர செலவுகள். இது குறையலாம் அல்லது கூடலாம்.