/* */

சென்னைக்கு போனால் இனி நீங்கள் கப்பலில் சுற்றலாம்! வருகிறது புதுதிட்டம்

சென்னையில், கப்பல் மூலம் கடலுக்கு சென்று திரும்பும் 2 நாள் சுற்றுலாத் திட்டம் ஜூன் மாதம் தொடங்கப்படும் என்று, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

சென்னைக்கு போனால் இனி நீங்கள் கப்பலில் சுற்றலாம்! வருகிறது புதுதிட்டம்
X

கோப்பு படம் 

சென்னைக்கு செல்வோர், மெரினா கடற்கரையின் அழகில் மயங்கிப் போவார்கள். அதே போல், கடலில் தெரியும் கப்பலை பார்த்து, அதை போய்ப் பார்க்க மாட்டோமா என்ற ஏங்குபவர்களும் உண்டு.

சென்னைக்கு ரயிலில் சென்றுவிடலாம்; மெட்ரோ ரயிலில் பறக்கலாம். அவ்வளவு ஏன், விமானத்திலும் குறைந்த கட்டணத்தில் செல்ல முடிகிறது. ஆனால், இந்த கப்பலில் போவது மட்டும் கனவாகவே உள்ளது என்று பெருமூச்சு விடுபவர்களின் ஏக்கத்தை போக்க, தமிழக அரசு கப்பல் சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

இது குறித்து, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது: சென்னையில் வரும் ஜூன் மாதத்தில் கப்பல் சுற்றுலா திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி, சென்னை துறைமுகத்தில் இருந்து, சொகுசு கப்பல் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீண்டும் துறைமுகம் திரும்பும். இது, 2 நாள் சுற்றுலா திட்டமாகும்.

இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதேபோல், விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் சொகுசு கப்பல் பயணத்திட்டமும் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக, அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

Updated On: 18 May 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்