/* */

offbeat tourist places in tamilnadu-குறைந்த செலவில், அரிதான இடங்கள்..! குழந்தைகளுடன் கோடை டூர் போகலாமா..?

offbeat tourist places in tamil-கோடை காலம் வந்தாச்சு..! குதூகல சுற்றுலா ஞாபகம் வந்தாச்சு..! குழந்தைகள் நச்சரிப்பு தொடங்கியாச்சு. பெற்றோர் யோசிக்கத் தொடங்கியாச்சு..!

HIGHLIGHTS

offbeat tourist places in tamilnadu-குறைந்த செலவில், அரிதான இடங்கள்..! குழந்தைகளுடன் கோடை டூர் போகலாமா..?
X

கோடைச் சுற்றுலா.(கோப்பு படம்)

offbeat tourist places in tamilnadu-கோடைகாலம் வருவதால் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்ல பெற்றோர்கள் விரும்புவார்கள். குறிப்பாக இந்த தலைமுறை பெற்றோர் தங்களுக்கு கிடைக்காத சந்தோஷங்களை குழந்தைகளுக்கு கிடைக்கச் செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள். அது உண்மையில் வரவேற்கத்தக்க ஒரு மாற்றமாகும்.மகிழ்ச்சிக்கு விலை போட முடியாது. அதிலும் குழந்தைகள் சந்தோசமாக இருக்க பெற்றோர் தாராளமாக செலவு செய்ய நினைப்பார்கள். இருப்பினும் நடுத்தர மக்கள் ஆண்டு ஒன்றுக்கு ஒரு சுற்றுலா என்று போகும்போது செலவு அதிகமாக இல்லாமலும் இருக்கவேண்டும் என்று நினைப்பதில் தவறும் இல்லை.


அதற்கு ஏற்ப உங்களுக்கு தேர்வு செய்து இந்த இடங்கள் தரப்பட்டுள்ளன.

கடந்த பதிவில் சில குறைந்த செலவு சுற்றுலா தலங்களைப் பார்த்தோம். அதேபோலவே, இந்த பதிவில் மீதி உள்ள offbeat சுற்றுலா தலங்கள் சிலவைகளைப் பார்ப்போம். அதிகமாக பேசப்பாடாத அரிதான இடங்களாக தேர்வு செய்து உங்களுக்கு வழங்குவதில் Instanews செய்தி தளம் மகிழ்ச்சி கொள்கிறது.

இந்தபதிவில்

ஜவ்வாது மலை - திருவண்ணாமலை மாவட்டம் (திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களும் வரும்)

தரங்கம்பாடி - மயிலாடுதுறை மாவட்டம்

சிறுமலை - திண்டுக்கல் மாவட்டம் ஆகிய சுற்றுலா இடங்களைப் பார்ப்போம்.

முதலில் வாங்க ஜவ்வாது மலைக்கு போவோம். அங்கு என்னென்ன பார்க்கலாம்? செலவுகள் எவ்வளவு ஆகும் என்று பார்ப்போம்.

offbeat tourist places in tamilnadu


I.ஜவ்வாது மலை

ஜவ்வாது மலை கிழக்குத் தொடர்ச்சி மலையில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலையை அடுத்து வரும் மலைத்தொடர் ஆகும். இம்மலைத் தொடர்கள் வேலூர் - திருப்பத்தூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் 262 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. இம்மலையின் சராசரி உயரம் 1060 மீட்டரில் இருந்து 1160 வரை ஆகும்.

1. அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்,திருவண்ணாமலை

2. அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில், படவேடு

3. சாத்தனூர் அணை

சாத்தனூர் அணை 1956ம் ஆண்டு தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இவ்வணையின் மொத்த நீர் கொள்ளவு உயரம் 119 அடியாகும். தமிழகத்தில் பெரிய அணைகளில் முக்கியமானதாகும். இந்த அணையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களும், இயற்கையான சூழலும் சுற்றுலா வருபவர்களுக்கு மகிழ்வூட்டுவனவாக உள்ளன. இங்குள்ள முதலைப்பண்ணையில்100க்கும் மேற்பட்ட முதலைகள் வளர்ந்து வருகின்றன. திருவண்ணாமலையில் இருந்து 30 கி.மீ. தூரமும் செங்கத்திலிருந்து 24 கி.மீ. தூரத்திலும் உள்ளது.


4. பர்வதமலை

சங்க காலத்தில் நன்னன் சேய் நன்னன் ஆண்ட பகுதி நவிர மலை என்பதே தற்போதைய பர்வதமலை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள், சவ்வாது மலைத்தொடரின் கீழ் அமைந்துள்ள இம்மலையின் மீது அபிதகுஜாம்பாள் , மல்லிகார்சுனர் கோயில் அமைந்துள்ளது. நீண்ட நெடிய இக்கோயில் மலையேறுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். குளிர்ந்த காற்றும் இயற்கை எழிலான காட்சியும் கண்டுகளிக்கலாம். யோகிகளும் சித்தர்களும் வழிபட்ட மலை என்றும் தென்கயிலாயம் என்றும் இம்மலை அழைக்கப்படுகிறது. தென்மாதிமங்கலம் அல்லது கடலாடியிலிருந்து இம்மலைக்கு செல்ல பாதை வசதி உண்டு. போளூரிலிருந்து 25 கி.மீ தூரமும் திருவண்ணாமலையில் இருந்து 30 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

offbeat tourist places in tamilnadu


5. ஜவ்வாதுமலை

கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான சவ்வாது மலை சுமார் 260 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மலையாளிகள் என்ற பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர். 200 மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இம்மலையில் பாதிரி என்ற ஊரில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த தடயங்களும் கீழ்செப்பிளி, மண்டபாறை ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் உள்ளன. பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான பல்வேறு நடுகற்கள் இம்மலையில் உள்ளன. சோழர்காலத்தில் கட்டப்பெற்ற கோவிலூர் சிவன் கோயில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்குள்ள மக்கள் தினை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள் பயிரிடுகின்றனர்.

தேன், மிளகு, பழவகைகளும் இம்மலைவாழ்மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கின்றன. பீமன் அருவி, படகு குழாம், பூங்கா, கோவிலூர் சிவன் கோயில், வைனுபாப்பு தொலைநோக்கி மையம், அமிர்தி வனவிலங்கு சரணாலயம் ஆகியன முக்கிய முக்கிய சுற்றுலா இடங்கள் ஆகும். போளூர், திருப்பத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.


6. மாமண்டூர் குடைவரைக்கோயில்.

தமிழகத்தில் அமைந்துள்ள பெரிய குடைவரைகளுள் ஒன்று. நரசமங்கலம் – மாமண்டூர் கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் 4 குடைவரைகோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்கள் மகேந்திரவர்மனும் அவரது பின்வந்த அரசர்களாலும் அமைக்கப்பட்டது. வலதுகோடியில் அமைந்துள்ளது முதல் மற்றும் இரண்டாம் குடைவரை முறையே விஷ்ணுவிற்கும் சிவனுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. குன்றின் மீது அமைக்கப்பட்டுள்ள 3 வது குடைவரை கருவறையில் இறை உருவங்கள் இல்லை. தென்கோடியில் அமைக்கப்பட்டுள்ளது 4வது முற்றுபெறறாத குடைவரை. வரலாற்றுச்சிறப்பு மிக்க மகேந்திரவர்ம பல்லவனின் பல பட்டப்பெயர்கரை கூறும் பல்லவர கிரந்த கல்வெட்டு, இம்மலைக்குன்றின் பின்புறம் அமைந்துள்ள சித்திரமேக தடாகத்தைப் பற்றிய குறிப்புள்ள 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு என வரலாற்றுப்பெட்டகமாக அமைந்துள்ளது இக்குடைவரைக்கோயில், இக்குன்றின் மீது வாலீஸ்வரர் கோயிலும், பைரவர் கோயிலும் அமைந்துள்ளது. குன்றின் வடகோடியில் சமணர் படுக்கையும் அது அமைந்துள்ள பாறையின் மீது திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பழைய கி.பி. முதல் ஆம் நூற்றாண்டு தமிழி கல்வெட்டும் காணலாம். வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் நரசமங்கலம் கிராமத்தில் இருந்து மேற்கே 2 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது.

offbeat tourist places in tamilnadu

7. சீயமங்கலம், குடைவரைக்கோயில்

அவஜிபாஜன பல்லவனேஸ்வரம், சிம்ம விஷ்ணு சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்படுகின்ற குடைவரைக்கோயில் பல்லவர் காலத்தில் குடைவரையாக மட்டும் இருந்தது பிற்கால மன்னர்களால் அர்த்தமண்டபம், முகமண்டபம், கோபுரம் என விரிவு படுத்தப்பட்டு இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. இக்கோயில் இறைவன் பெயர் தூணாண்டார் ஆகும். இக்கோயில் தூணில் உள்ள நடராஜர் சிற்பம் தமிழகத்தில் முதல் நடராஜர் உருவம் என்று ஆய்வாளர்களால் குறிக்கப்பெறுகிறது. 30 மேற்பட்ட கல்வெட்டுகள் அரிய வரலாற்றுத்தகவல்களை கொண்டுள்ளது. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள குன்றில் சமணத் படுக்கையும் சிற்பமும் அமைந்துள்ளது. இக்கோயில். தேசூரிலிருந்து மேற்கே 2 கி.மி. தொலைவில் உள்ளது சீயமங்கலம்.

நமது வசதிக்கு ஏற்ப காரில் வந்தால் கூட, இரண்டுநாள் தங்கி இந்த இடங்களை பார்ப்பதற்கு தோராயமாக 4 பேருக்கு ரூ.25ஆயிரத்துக்குள் மட்டுமே செலவாகும்.

II. தரங்கம்பாடி - மயிலாடுதுறை மாவட்டம்

தரங்கம்பாடி, மயிலாடுதுறை மாவட்டத்தின் 4 பேரூராட்சிகளில் ஒன்றாகும். தரங்கம்பாடி வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியுமான தரங்கம்பாடியின் கடற்கரையில் தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில் உள்ளது.


1. பூம்புகார்

தரங்கம்படி மாவட்டத்தில் சீர்காழி தாலுக்காவில் உள்ளது. இது காவேரிபூம்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மயிலாடுதுறை சந்திப்பில் இறங்குவதால், பூம்புகார் சாலை வழியாக சாலையில் இருந்து வந்தவர்கள், சீர்காழியில் இறங்க வேண்டும். பூம்புகார் மயிலாடுதுறை மற்றும் சீர்காலி சாலையில் இணைக்கப்பட்டுள்ளது.


2. தரங்கம்பாடி- டேனிஷ் கோட்டை

வங்காள விரிகுடாவின் கிழக்கு கரையோரப் பாதையில் மயிலாடுதுறை தென் கிழக்கே 28 கி.மீ. டேனிஷ் கோட்டை தரங்கம்பாடியின் சிறப்பு அம்சமாகும். மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி மற்றும் சிதம்பரம் ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதிகள் உள்ளன. 1620 இல் கட்டப்பட்ட டேனிஷ் கட்டிடக்கலை அம்சங்களைக் காண்பிப்பதாகும். இந்த கோட்டை தற்போது தமிழ்நாட்டின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த அருங்காட்சியகம் அனைத்து நாட்களிலும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் திறக்கப்பட்டிருக்கும்.

offbeat tourist places in tamilnadu

3. திருமுல்லைவாசல்

இந்த நகரம் சீர்காழியின் 14 கி.மீ. கிழக்கே உள்ளது. அதன் அழகிய கடற்கரைக்கு இது மிகவும் பிரபலமானது, இது இயற்கை அழகை முழுமையாகக் கொண்டுள்ளது. இந்த நகரத்தில் ஒரு பழங்கால கோயில் உள்ளது. அருள்மிகு முல்லிவனநாதர் இந்த கோயிலின் முக்கிய தெய்வமாகும். இந்த தெய்வீக பாடல்களில் இந்த ஆலயம் புகழப்படுகின்றது.

4. கீழபெரும்பட்டினம்

பூம்புகாரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கீலபெரப்பள்ளம் ஸ்ரீ நாகநாத சுவாமிக்கு வழிபாடு செய்வதற்காக ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வருகை தருகிறது. இந்த கோவில் ஒன்பதாவது நவக்கிரகம், கேதுவின் இடமாகும்.

5. திருவெண்காடு

திருவெண்காடு 8 கி.மீ. பூம்புகார் இருந்து. அருள்மிகு சுவாத்தாரான சுவாமி கோயிலின் உள்ளே மற்றொரு நவக்கிரக புதன் உள்ளது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் ஒவ்வொரு நாளும் புதனை வணங்க வருகிறார்கள். இந்த கோவில் தெய்வீக பாடல்களில் புகழப்படுகின்றது.


6. வைத்தீஸ்வரன்கோவில்

தேவராமனின் தெய்வீக பாடல்களில் வைத்தீஸ்வரன்கோயிலை புல்லிகுடுவெல்லூர் என்று அழைக்கப்படுகிறது. தலைவன் வைத்தியநாதன் மற்றும் தேவி தாய்யல்நயாகி. அருள்மிகு முத்துகுமாரசுவாமி என முருகன் இங்கு அழைக்கப்படுகிறார். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., சீர்காரிலிருந்து 5 கி.மீ., தூரத்தில் வைதீஸ்வரங்கொவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மற்றொரு நவக்கிரகம், செவ்வாய் இருக்கை ஆகும்.

7. திருக்கடையூர்

திருக்கடையூர் சிதம்பரம் – நாகப்பட்டினம் பேருந்து வழியில் உள்ள்து.மார்க்கண்டேயனின் உயிரை காப்பாற்றுவதற்காகவும், அழியாதிருப்பதற்காகவும் யமனை அழித்தார். யோகத்தை அழித்தார். இது சக்தி மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகும். அருள்மிகு ஆமதாதேஸ்வரர் ஆலயத்தின் உட்பகுதிகளில் ஸ்ரீ அபிராமி அம்மன் கோவிலின் அமைந்துள்ளது. அபிராமி அன்ஹாத்தியின் தெய்வீக பாடல்களை பெரிய செயிண்ட் அபிராமி பட்டார் இயற்றியுள்ளார். 60 வயதை அடைந்த கணவன் மனைவியிடம், இந்து குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியர், தங்களது சாஸ்தி அப்தூப்தி விழாவை கோவிலுக்குள் கொண்டாடுகிறார்கள்….

offbeat tourist places in tamilnadu

8. சீர்காழி

மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் இடையேயான பிரதான பாதையில் சீர்காழி அமைந்துள்ளது. அருள்மிகு சட்டுநாத சுவாமி ஆலயத்தில் பல அற்புதமான கட்டிடக்கலை மற்றும் சிற்ப அம்சங்கள் உள்ளன. தெய்வத்தின் தெய்வீக பாடல்களில் இந்த கோவில் புகழப்படுகின்றது. நான்கு பெரிய தெய்வீக கவிஞர்களில் ஒருவரான சைவ துறவி திருஞானசம்பந்தர் இங்கு சிவன் மற்றும் பார்வதி தெய்வீக அருளால் வழங்கப்பட்டார். ஒவ்வொரு மாதமும்சித்திராய் தமிழ் மாதத்தில், திருமுளையால் திருவிழா ஒரு பெரிய முறையில் கொண்டாடப்படுகிறது.


9. மயிலாடுதுறை

அருள்மிகு மயூரநாதர் கோயில் இங்குள்ளது. இந்து இதிகாசங்களின்படி, அன்னாய் பரவசம் ஒரு மயில் வடிவத்தில் நடனமாடியது, எனவே மயிலாடுதுறை என்று அழைக்கப்படுகிறது. மாயூரநாதரை வழிபட்டு பக்தர்கள் பயணிக்கலாம். புனித குளியல் திருவிழா

10. அனந்தமங்கலம்

மயிலாடுதுறைக்கும் காரைக்காலுக்கும் இடையே கிழக்கு கடற்கரையில், அனந்தமங்கலம் திருக்கடையாரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் மக்கள் அனைவருக்கும் அருள்மிகு ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருள்பாலிக்கிறார்கள். இங்கே ஆஞ்சநேயரின் தெய்வீக சிலை அதன் மூன்று கண்களாலும், பத்து கைகளாலும் தனித்துவமானது. ஆஞ்சநேயரின் விசேஷ வழிபாடு சனிக்கிழமைகளில் மற்றும் அமாவாசை நாட்களில் நடைபெறுகிறது.

குடும்பத்துடன் தங்குவதற்கும் சுவையான உணவுக்கும் மயிலாடுதுறையில் தரமான ஓட்டல்கள் உள்ளன. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வருவதற்கு ரயில் மற்றும் பேருந்துகள் உள்ளன. கார் பயணம் வருபவர்களுக்கும் எல்லா வசதிகளும் கிடைக்கும். 4 பேர் தங்கி 2 நாட்கள் இந்த இடங்களை பார்த்துச் செல்ல தோராயமாக ரூ.30ஆயிரம் செலவாகலாம். ரயில் மற்றும் பேருந்தில் வருபவர்களுக்கு இன்னும் செலவு குறையலாம். ஏனெனில் ஒரு நாள் திட்டமிடலுக்கு ஏற்ப நாம் ஒரு கேப் புக் செய்து கொள்ளலாம். நாள் வாடகை பேசினால் 2 நாட்களுக்கு தோராயமாக ரூ.4-5 ஆயிரம் வரலாம்.

III. சிறுமலை - திண்டுக்கல் மாவட்டம்

சிறுமலை, திண்டுக்கல்லுக்கு 25 கிலோமீட்டர் தூரத்திலும் , மதுரையில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இப்பகுதியில் நிறைய மலைக்குன்றுகள் உள்ளன. இல்லாக் பன்னாட்டுப் பள்ளியும் இங்கே அமைந்துள்ளது. ஆண்டுமுழுவதும் நடுத்தரமான சூழலில் இருக்கக் கூடிய காட்டுப் பகுதி. விதவிதமான செடிகளும் விலங்குகளும் வாழ்கின்றன.


சிறுமலை

சிறுமலை 60000 ஏக்கர் பரப்பளவுள்ளவை (200 கி.மீ). திண்டுக்கல்லிலிருந்து 25 கி.மீ. (16 மைல்கள்), மதுரையிலிருந்து 40 கி.மீ. (25 மைல்கள்) தொலைவில் உள்ளது. உயர்ந்த மலைகளைக் கொண்டது. கொடைக்கானல் மலையைவிட அதிகமாக 18 கொண்டைஊசி வளைவுகளைக் கொண்டது. இங்கு கில்லாக் இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. அடர்ந்த காடுகளும், நல்ல சீதோஷன நிலையையும் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது.

இங்கு இயற்கையோடு கூடிய மக்கள் விரும்பும் பல முக்கிய இடங்கள் உள்ளன.


அன்னை வேளாங்கன்னி தேவாலயம்

மலையின் உச்சியில் சரிவான பகுதியில் உள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. செப்டம்பர் மாதம் ஆரோக்கி மாதா திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெறும்.

offbeat tourist places in tamilnadu


சிறுமலை நீர்த்தேக்கம்

2010ஆம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட சிறு நீர்த்தேக்கமாகும். அடர்ந்துயர்ந்த மரங்களுக்கிடையே அமைந்துள்ளது. படகு சவாரியும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வார இறுதியில் போதுமான நீர் இருந்தால் மட்டும் படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது.

உயர் கோபுரம்

சிறுமலையின் 17வது கொண்டைஊசி வளைவில் இவ்விடம் அமைந்துள்ளது. அங்கிருந்து கீழே தெரியும் அற்புதமான இயற்கை காட்சிகளைக் கண்டுகளிக்க மிகவும் அருமையான இடம். திண்டுக்கல் நகரப்பகுதி முதல் சிறுமலையின் பிற மலைப் பகுதிகள் வரை கண்டுகளிக்கலாம்.


சஞ்சிவனி மலை

சிறுமலையின் ஒருபகுதியாக உள்ள இம்மலை. ராமாயனத்தில் ராவணனுடன் யுத்தம் நடந்தது. யுத்ததில் மயக்கமுற்ற இலக்குவணனை எழுப்புவதற்கு மூலிகை தேவைப்பட்டது. அதனை எடுத்துவர சென்ற அனுமான் மூலிகையை கண்டிறிய ஐயமுற்று மலையையே தூக்கிச் சென்றபோது அம்மலையிலிருந்து விழுந்த ஒரு சிறு துண்டாக சஞ்ஜீவினி மலை கருதப்படுகிறது.

சாதியாறு

சிறுமலையிலிருந்து புறப்படும் இந்நதி தென்புறமாக ஓடி வைகையில் கலக்கிறது. இக்கழிமுகப் பகுதி 819 சதுர கி.மீ. (316 ச.மைல்). நீர் பாய்ச்சல் பரப்பு 4279.89 ஹெக்டேர் (10575.8 ஏக்கர்). வாடிப்பட்டி அருகில் இவ்வாற்றின் குறுக்கே சாதியாறு அணை விவசாய பாசனத்துக்காக கட்டப்பட்டுள்ளது. பாசன பகுதிகள் மதுரை மாவட்டத்திலுள்ளன.

offbeat tourist places in tamilnadu

வெள்ளிமலை முருகன் கோவில்

சமவெளியிலிருந்து 45 நிமிடங்கள் நடந்து செல்லும் தூரத்தில் மலையில் அமைந்துள்ளது. மலையைச் சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களுக்கும் இக்கோவில் பொதுவாக அமைந்துள்ளது.

கான்டிஜ் எஸ்டேட்

சிறுமலையில் 1000 ஏக்கர்களைக் கொண்டு அமைந்துள்ளது. இதிலிருந்து 3 ஆறுகளும் 2 நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. இப்பகுதியில் 120-132 செ.மீ. அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழையாகப் பொழிகிறது.20-30000 ஏக்கர் ஒதுக்குக் காடுகளைக் கொண்டுள்ளது. மருத்துவத் தாவரங்களை உள்ளடக்கிய இயற்கை வளமாக உள்ளது. காடு ஒழிப்பை தடுத்து மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கையைப் பாதுகாக்கும் அரணாக இம்மலை உள்ளது.

செல்வி கோவில்

நீ்ள் வட்ட வடிவில் சின்னமலைக்கும் திண்டுக்கல்லுக்கும் நடுவில் இயற்கை எழில்மிகு பார்வையில் இக்கோவில் அமைந்துள்ளது.

offbeat tourist places in tamil

அகஸ்தியர்புரம்

அகஸ்தியர் என அழைக்கபட்ட சித்தர் இங்கு தங்கியிருந்ததால் இப்பகுதி அகஸ்தியர்புரம் என அழைக்கப்படுகிறது. பழங்காலம் முதல் பல்வேறு சித்தர்கள் வசித்த இடமாக கருதப்படுகிறது. மருத்துவ தாவரங்களும், மூலிகைச் செடிகளும் இங்கு அதிகம் காணப்படுகிறது. இப்பகுதியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம் காணப்படுகிறது.


வெள்ளிமலை

அகஸ்தியர் புரத்தில் வெள்ளிமலை காணப்படுகிறது. சிறுமலையிலேயே மிக உயர்ந்த மலை இதுவாகும். இம்மலையின் உச்சி முழுவதும் வெள்ளியாக இருந்தது. கலியுகத்தில் மக்களால் இது திருடப்பட்டுவிடும் என்பதால் அகஸ்தியர் இதனை பாறைக் கல்லாகி மாற்றிவிட்டதாகக் கூறுகின்றனர். இம்மலையின் உச்சியில்தான் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ லிங்கம் காணப்படுகிறது. 30-45 நிமிடங்கள் நடந்துசென்று இவ்வுச்சியை அடையலாம்.

சிறுமலை யாரும் அடிக்கடி செல்லாத ஒரு பகுதி. குழந்தைகளை குதூகலமாக அழைத்துச் செல்லலாம். விரும்பினால் கொடைக்கானல் செல்லலாம்.

சிறுமலையில் குடும்பத்துடன் தங்குவதற்கு தரமான விடுதிகள் உள்ளன. ஒருநாள் இரவு தங்கி இரண்டுநாள் சுற்றுலாவாக இந்த இடங்களை சுற்றிப்பார்க்கலாம். தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வருவதற்கு திண்டுக்கல் வரை ரயில் மற்றும் பேருந்துகள் உள்ளன. திண்டுக்கல்லில் இருந்து சிறுமலைக்கு பேருந்துகள் உள்ளன. காரில் வந்தால் நேரடியாக சிறுமலைக்கு வந்துவிடலாம். 4 பேர் தங்கி 2 நாட்கள் இந்த இடங்களை பார்த்துச் செல்ல தோராயமாக ரூ.25ஆயிரம் செலவாகலாம். ரயில் மற்றும் பேருந்தில் வருபவர்களுக்கு இன்னும் செலவு குறையலாம். ஏனெனில் ஒரு நாள் திட்டமிடலுக்கு ஏற்ப நாம் ஒரு கேப் புக் செய்து கொள்ளலாம். நாள் வாடகை பேசினால் 2 நாட்களுக்கு தோராயமாக ரூ.2-3 ஆயிரம் வரலாம்.

Updated On: 19 March 2023 8:28 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?