திருநங்கைகள் ஆசி உங்களை வாழவைக்குமா..? படிங்க..தெரிஞ்சுக்கோங்க..!

getting blessings from transgender-திருநங்கைகள் என்பவர் யார்? திருநங்கை மாற்றம் எப்படி ஏற்படுகிறது? ஒரு சிறிய விளக்கம் இந்தக் கட்டுரையில் தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருநங்கைகள் ஆசி உங்களை வாழவைக்குமா..? படிங்க..தெரிஞ்சுக்கோங்க..!
X

getting blessings from transgender-கூவாகம் திருவிழாவில் திருநங்கைகள்.

getting blessings from transgender-இந்து பாரம்பரியங்களில் திருநங்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களது ஆசி மங்களகரமானதாக கருதப்படுகிறது. பல குடும்பங்களில் திருமணத்தில் தம்பதிகளை ஆசீர்வதிக்க மற்றும் குழந்தைகளை ஆசீர்வதிக்க, வளைகாப்பு போன்ற குடும்ப விழாக்களிலும் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

காலம் காலமாகவே அவர்களை கோசா, ஒன்பது, அலி, அரவாணி என்று பல்வேறு வகையான விரும்பத்தகாத பெயர்களில் அழைக்கப்பட்டார்கள். சமீப காலமாகத்தான் அவர்களை திருநங்கை என்ற பொருத்தமான பெயரில் அழைக்கப்படுகின்றனர். அதாவது திரு = ஆண்மகன், நங்கை = பெண்மகள்.


திருநங்கைகளைப்பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அவர்களாக நினைத்து மாறுவதில்லை. அது இயற்கை செய்கின்ற ஒரு பிறவிப்பயன். ஆணாக பிறந்து, பாலின உணர்வைப் பெறும் வயதில் குரோமோசோம் குறைப்பாட்டால் மனதளவில் மட்டும் பெண்ணாக உணர்ச்சி மாற்றம் அடைவார்கள்.

 • மனதளவில் பெண்ணாக பருவமாற்றம் அடையும் போது அவர்களின் பிறப்பு உறுப்பு மீதே வெறுப்பு உண்டாகும். பின் முறையான ஆங்கில மருத்துவ அறுவை சிகிச்சை அல்லது அனுபவம் பெற்றவர்கள் மூலம் உறுப்பை நீக்கி விடுவார்கள்.
 • உண்மையான ஆணுக்கு உறுப்பை நீக்கி விட்டால், அதோடு அவர் மரணமடைய வேண்டியதுதான். ஆனால், திருநங்கைகளுக்கு அப்படி இல்லை. அவர்களின் உறுப்பு நீக்கப்பட்டவுடன்தான் அவர்களுக்கான வாழ்க்கை தொடங்குகிறது எனலாம். இதில் இருந்தே இவர்களது மாற்றம் இயற்கையின் ஏற்படுத்திய கோளாறு என்பதை அறியலாம்.
 • மனதளவில் பெண்ணுக்குரிய உணர்வுகள் இயல்பாகவே வந்து விடுவதால், அவர்களின் பெண்களுக்குரியதாகவே இருக்கும். பெண்களைப் போலவே நடை, உடை, பாவனை, அலங்காரம் எல்லாம் ஒரு பெண் போலவே செய்து கொள்வார்கள்.
 • திருநங்கை என்பவர் ஆண் என்ற உடலுக்குள் பெண்ணுக்குரிய உணர்வுகளை உள்ளார்ந்து வைத்திருந்தவர்கள். அந்த அடக்கி வைத்த உணர்வுகள் வெளிப்படும்போது கொஞ்சம் வேகமாகவே பீறிட்டு எழுகிறது. அதனால்தான் அவர்கள் மேக் அப் போடுவதெல்லாம் அதீதமாக தெரிகிறது. இதை நாம் புரிந்துகொண்டால் அவர்களை வெறுப்புடனும் நடத்தமாட்டோம்.
 • சமுதாய புறக்கணிப்பே அவர்கள் பாலியல் தொழிலுக்குள் வாழ்கிறார்கள். .
 • பெண் தன்மை உடலில் இயல்பாகவே இருப்பதால் இவர்களின் மார்பகமும் பெண்களைப் போலவே கொஞ்சம் பெரிதாகி விடுகிறது. அப்படியே ஆகவில்லை என்றாலும் கூட, மருத்துவ முறையில் பெரிதாக்கிக் கொள்கிறார்கள்.
 • மனதளவில் பெண் தன்மையுடன் இருப்பதால் எதிர்பாலினமான ஆண்களின் ஆதரவுதான் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. ஆகவேதான் ஆண்களைச் சீண்டுகிறார்கள். இது உளவியல்பூர்வமான உண்மையும் கூட.
 • இவர்கள் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள சட்டப்படியான வழிமுறைகள் ஏதும் இல்லை. அப்படி திருமணம் செய்து கொண்டால் அது ஒன்று ஹோமோ அல்லது லெஸ்பியன் அல்லது மனித இனம் மிருக இனத்துடன் கொள்ளும் உடற்புணர்ச்சி என்ற வகை பாலியல் உறவாக கருதியே, இச்செயலை இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 377 இன்கீழ், இயற்கைக்கு மாறான புணர்ச்சி என்ற வகையில் தண்டிக்கத்தக்க குற்றவகையில் வருகிறது. பரிதாபத்துக்குரியர்களின் இந்த நிலை மாற வேண்டும்.
 • அன்பிற்காகவும், பாதுகாப்புக்காகவும் ஆணை நாடும் திருநங்கைளின் பலவீனத்தை பயன்படுத்தி இவர்களின் உழைப்பில் உண்டு களித்து, குடித்து கும்மாளமிடும் ஆண்களும் இருக்கிறார்கள். இது ஒரு சமூக குற்றம்.

திருநங்கைகள் இயற்கையாக மட்டுமல்லாமல் இந்த சமூகத்திலும் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது சிறிதளவே இங்கு கூறப்பட்டுள்ளது.அதுமட்டுமல்ல குடியிருப்பு, வேலை வாய்ப்பு, மற்றும் குறிப்பாக கழிப்பிடம் கூட அவர்களுக்கு பிரச்சினைதான்.

getting blessings from transgender-கனவில் திருநங்கை வந்தால் என்ன பலன்?

 • திருநங்கை பற்றி நீங்கள் கனவு காண்பது பொதுவாக கவனிக்கப்படாத சில சிறிய பிரச்சினைகள் காரணமாக உங்களுடைய குடும்பமானது பெரிய நெருக்கடியில் சிக்கி இருப்பதை குறிக்கிறது. அதிலிருந்து நீங்கள் வெளியே வருவதற்கு மிகவும் கவனமாக சிந்திக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.
 • திருநங்கையை கனவில் கண்டால் நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் முன்னேற விரும்பினால் அதில் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். உங்களுடைய கடினமான உழைப்பு உங்களை மிக வேகமாக வெற்றி பெற வைக்கும் என்பது பொருளாகும்.
 • திருநங்கைகளை கனவில் காண்பது உங்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய செயல்களால் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு அதனால் கெட்டபெயர் வரப்போகிறது என்பதை குறிக்கிறது.
 • திருநங்கையை நீங்கள் உங்களுடைய கனவில் பிரசவம் பார்ப்பது போல கண்டால் உங்களுடைய குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும் என்பதை குறிக்கிறது.
 • திருநங்கை உங்களை அடிப்பதுபோல கனவு கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் பல முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்பட போகிறது என்பதை குறிக்கிறது.
 • திருநங்கைகள் உங்களை ஆசீர்வதிப்பது போல நீங்கள் கனவு கண்டால் உங்களுடைய மனதில் இருக்கக்கூடிய குழப்பங்கள் அனைத்தும் நீங்கி உங்களுக்கு தெளிவு பிறக்கும்.
 • திருநங்கைகள் உங்களுடைய வீட்டில் அமர்ந்து இருப்பது போல நீங்கள் கனவு கண்டால் நீங்கள் மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதை இது குறிக்கிறது
 • திருநங்கைகளை திருமணமானவர்கள் கனவு கண்டால் அவர்களுடைய குடும்பம் மற்றும் தம்பதியர்களுக்கு இடையே அன்பும் ஒற்றுமையும் அதிகரித்து மிகவும் சந்தோசமாக வாழ்வார்கள்.
Updated On: 3 Aug 2022 6:24 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஆதிதிராவிடர்களுக்கான மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற முதல்வர்...
 2. சினிமா
  ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
 3. உலகம்
  அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
 4. சினிமா
  நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
 5. இந்தியா
  பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
 6. சினிமா
  300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 7. தமிழ்நாடு
  அதிமுக வேட்பாளருக்கான 'ஏ' , 'பி' படிவங்களில் கையெழுத்திட...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட...
 9. தமிழ்நாடு
  நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
 10. டாக்டர் சார்
  சைவ உணவுகளில் நமக்கு போதுமான சத்துகள் கிடைக்கிறதா?.....படிச்சு...