/* */

காற்றில் இருந்து தண்ணீர்..! வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிசயம்..!

வண்டலூரில் அமைக்கப்பட்டுள்ள காற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் தயாரிக்கும் இயந்திரம் எப்படி இயங்குகிறது தெரியுமா?

HIGHLIGHTS

காற்றில் இருந்து தண்ணீர்..! வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிசயம்..!
X

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த 2021 டிசம்பர் 18ம் தேதி ஒரு புதிய குடிநீர் இயந்திரம் திறந்து வைக்கப்பட்டது. அந்த இயந்திரத்தில் குழாய் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. பின் எப்படி தண்ணீர் கிடைக்கிறது? நிசான் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தில் அந்த குடிநீர் இயந்திரத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.

எவ்வாறு அது செயல்படுகிறது?

வளிமண்டலத்தில் உள்ள காற்றை அப்படியே தண்ணீராக மாற்றித் தரும் அக்ஷய பாத்திரம்தான் இந்த இயந்திரம். கொஞ்சம் வியப்பாக இருந்தாலும் அதுதான் உண்மையும். நவீன தொழில்நுட்பத்தில் அந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காற்றில் சுமார் 3095 கியூபிக் மைல்ஸ் தண்ணீர் இருப்பது அறிவியல் ஆய்வுப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட உண்மை. அதில் 1 கியூபிக் மைல் என்பது 4164 பில்லியன் லிட்டர்கள்.1 பில்லியன் லிட்டர் என்பது 100 கோடி லிட்டருக்கு சமம். தெளிவாக சொன்னால், இந்த பூமியில் உள்ள ஆறுகளில் ஓடும் தண்ணீரை விட 6 மடங்கு அதிகமான தண்ணீர் வளிமண்டலத்தில் இருக்கிறது. இந்தத் தண்ணீரும் ஒரு ஆண்டுக்கு 40 தடவை மழை,வெள்ளம்,புயல் போன்ற இயற்கை காரணிகளால் மறுசுழற்சிக்கு உள்ளாக்கப்படுகிறது.

வளிமண்டல காற்று :

வளிமண்டலத்தில் இருக்கும் காற்று இந்த இயந்திரத்தில் உள்ள மோட்டார் மூலமாக உள்ளே உறிஞ்சப்படுகிறது. அந்தக் காற்று ஒரு ஃபில்டர் வழியே செலுத்தப்படுகிறது. அந்த ஃபில்டர் காற்றில் உள்ள தூசிகளை வடிகட்டி தூய்மை ஆக்குகிறது. அவ்வாறு சுத்தமாக்கப்பட்ட காற்று ஒரு குளிர்விப்பான் அதாவது Condensation unit வழியாக செலுத்தப்படுகிறது. அங்கு காற்றானது குளிர்ந்து அப்படியே நீராக மாறுகிறது. அந்த நீரை மீண்டும் சுத்திகரித்து,மினரல்கள் சேர்க்கப்படுகிறது. அதுவே பின்னர் குடிப்பதற்கு வழங்கப்படுகிறது.

ஏசி கூட கிட்டத்தட்ட இதே முறையில் தான் இயங்குகிறது. ஏசியில் இருந்து தண்ணீர் வெளியறுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் ஏசியில் வரும் தண்ணீர் ஒரு குழாய் மூலமாக வெளியேற்றப்படுகிறது.

இந்த இயந்திரம் மூலம் பெறப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு மினரல்கள் சேர்க்கப்பட்டு பின்னர் குடிநீராக வழங்கப்படுகிறது. இதுதான் அந்த இயந்திரத்தின் இயக்க முறை. இப்படி மிக சுத்தமான, ஆரோக்கியமான மற்றும் சுவையான தண்ணீரை உருவாக்கித் தரும் இந்த இயந்திரத்தை ஜப்பான் நாட்டின் நிசான் NISSAN கார் நிறுவனம் தங்களது CSR (Socially Responsible Companies)ஆக்ட்டிவிட்டியின் மூலமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் நிறுவித் தந்துள்ளது. இந்த இயந்திரம் மூலம் ஒரு நாளில் கிட்டத்தட்ட ஆயிரம் லிட்டர்கள் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது.

Updated On: 3 Jun 2022 1:14 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  3. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  7. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  8. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  10. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...