/* */

புதிய ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் மாடல் அறிமுகம்..!

ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் பேட் கோ எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

HIGHLIGHTS

புதிய ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் மாடல் அறிமுகம்..!
X

 ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்(கோப்பு படம்) 

இந்தியாவின் ப்ரீமியம் பிராண்ட் ஸ்மார்ட்போன்ஸ் மற்றும் கேட்ஜெட்ஸ் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ், டேப்லெட் தயாரிப்பிலும் தனது பலத்தை காட்ட தயாராகி வருகிறது. அதன்படி நீண்ட காலமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் நிறுவனத்தின் பேட் கோ எனும் டேப்லெட் இந்திய உட்பட சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 11.35-இன்ச் எச்டிஆர் டிஸ்பிளே மற்றும் 2.4K பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. இதோடு டால்பி விஷன், TuV Rheinland ப்ளூ-லைட் ஃபில்டர் என பல்வேறு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் விற்பனைக்கு வந்துள்ளது.


சக்திவாய்ந்த ஹீலியோ ஆக்டோ-கோர் (Helio G99 octa-core) சிப்செட் மற்றும் மாலி - ஜி57 எம்பி2 ஜிபியு (Mali-G57 MP2 GPU)கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியன்ட்களில் ஒன்பிளஸ் பேட் கோ விற்பனைக்கு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், ஒன்பிளஸ் பேட் கோ OxygenOS 13.1 எனப்படும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. 4K 30fps கொண்ட 8எம்பி ரியர் மற்றும் 8 எம்பி முன்பக்க செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

இதுதவிர, 8000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் சூப்பர்வூக் (33W SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. அதேபோல் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (quad stereo speakers) கொண்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு புளூடூத் 5.3, வைஃபை 6, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், எல்டிஇ மற்றும் 5ஜி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் பேட் கோ 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வைஃபை வேரியன்ட் விலை ரூ.19,999-ஆகவும், 8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி எல்டிஇ (LTE) வேரியண்ட் ரு.21,999 ஆகவும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி எல்இடி (LTE) வேரியன்ட் ரூ.23,999 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் அக்டோபர் 12-ம் தேதி இதன் முன்பதிவு துவங்குகிறது.

Updated On: 7 Oct 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்