/* */

டுவிட்டரை தொடர்ந்து இலவசமாக பயன்படுத்த முடியுமா? :எலான் மஸ்க் கொடுத்த ஷாக்

சாதாரண பயனர்கள் டுவிட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் வணிக மற்றும் அரசாங்க பயனர்களுக்கு சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும் என மஸ்க் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

டுவிட்டரை தொடர்ந்து இலவசமாக பயன்படுத்த முடியுமா? :எலான் மஸ்க் கொடுத்த ஷாக்
X

எலன் மஸ்க்

உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்கினார்.

அதை தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார். டுவிட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காகவே இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பதாக சொல்லப்பட்டது.

டுவிட்டர் எலான் மஸ்க் வசம் ஆனதில் இருந்து தொடர்ந்து டுவிட்டரை வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்த முடியுமா என பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சாதாரண பயனர்கள் தொடர்ந்து எப்போதும் டுவிட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் வணிக மற்றும் அரசாங்க பயனர்களுக்கு சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 4 May 2022 5:27 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...
  2. காங்கேயம்
    வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு...
  3. திருப்பூர்
    உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு
  4. உடுமலைப்பேட்டை
    உடுமலை அருகே குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
  5. வீடியோ
    🔥Ajith Billa Re-Release🔥 FDFS Celebration | Ajith Kumar | Billa |...
  6. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  7. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  8. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  9. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?