/* */

முதியவர்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவு அளிப்பது, காலத்தின் கட்டாயம்

Information Technology News in Tamil -அயல்நாட்டில் வேலை என்பது இளைஞர்களின் கனவாக இருந்தாலும், முதியவர்களுக்கு அடிப்படை டிஜிட்டல் கல்வியறிவு அதிக முக்கியத்துவம் பெறுகிறது

HIGHLIGHTS

முதியவர்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவு அளிப்பது, காலத்தின் கட்டாயம்
X

Information Technology News in Tamil - இந்தியாவின் இளைய தலைமுறையினருக்கு இடம்பெயர்வு எப்போதும் ஒரு கவர்ச்சிகரமான வாய்ப்பாக இருந்து வருகிறது. இருப்பினும், சமீப காலங்களில் வேகமாக மாறிவரும் சமூகப் பொருளாதார சூழ்நிலை, முன்னெப்போதும் இல்லாத அளவில், குறிப்பாக மிகவும் வளர்ந்த மேற்கத்திய நாடுகளுக்கு இடம்பெயர்வதை ஏற்படுத்தியுள்ளது. அயல்நாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்க தொழில்முறை வழிகாட்டுதல் மற்றும் உதவி இப்போது அதிகமாக கிடப்பதால், அயல்நாட்டிற்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது..

கிட்டத்தட்ட அனைவருமே இடம்பெயர்வதற்கான மிகவும் பிரபலமான இடங்கள் ஐரோப்பாவின் வளர்ந்த நாடுகளாகும், மேலும் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவை பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. கனடா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவும் அடுத்து பட்டியலில் இடம்பெற்றுள்ளது

இன்று, நாட்டில் பல வீடுகளில் தனிமையில் வசிப்பவர்கள் ஒவ்வொரு நாளும் தனிமையுடன் போராடும் முதியவர்கள். அவர்கள் பெரும்பாலும் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டு விடுவோம் எனற பயத்தில் வீடு மற்றும் உடனடி அருகாமையில் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள்.

முன்னெப்போதையும் விட எளிதாகவும் மலிவாகவும் ஆக்கியுள்ள நம்மைச் சுற்றியுள்ள டிஜிட்டல் புரட்சியைப் பற்றி நமது வயதானவர்களில் பலருக்கு தெரியாது. அவர்களின் டிஜிட்டல் திறன்கள் என்பது வெளிநாட்டில் வசிக்கும் தங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் தொடர்புகொள்வதற்காக வீடியோ அழைப்புகளுக்கு பதிலளிப்பது மற்றும் அத்தியாவசிய சேவைகளை வீட்டிற்கு வழங்குவதற்காக உள்ளூர் குரல் அழைப்புகளை மேற்கொள்வது என்பதோடு நின்று விடுகிறது.

மேலும், இவற்றைத் தாண்டி முதியவர்களின் டிஜிட்டல் திறன்களை வளர்ப்பதில் இளைய தலைமுறையினர் அதிக அக்கறை காட்டுவதில்லை.


குறிப்பாக தொற்றுநோய் போன்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் அவர்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. இதன் விளைவாக, அவர்கள் விரைவான மற்றும் எளிதான தீர்வுகள் மற்றும் சேவைகளைத் தேட முனைகிறார்கள். ஆனால், தங்கள் வீட்டு வாசலில் அவர்களுக்குச் சேவை செய்யும் நம்பகமான உதவியாளர்களாகக் காட்டிக்கொள்பவர்களால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை அறிந்திருக்கவில்லை.

உள்ளூரில் உள்ள விற்பனை கடைகளை எவ்வாறு கூகுள் செய்வது அல்லது இ-காமர்ஸ் தளங்களில் மலிவாக பொருட்களை ஆர்டர் செய்வது எப்படி என்பது வயதானவர்களில் பலருக்குத் தெரியாது.

அவர்கள் இன்னும் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு அல்லது எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கு மற்றவர்களை நம்பியிருக்கிறார்கள். ஆனால், இவற்றுக்கெல்லாம் பெரும்பாலும் நியாயமற்ற சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும், மொபைல் ஃபோனில் ஒரு சாதாரண அம்சத்தை அணுக முடியாத போது, சில கடைகள் "அதைச் சரிசெய்து" கொடுப்பதாக சொல்லி, சாப்ட்வேர் அப்டேட் அல்லது ஆப் இன்ஸ்டால் என கணிசமான பணத்தை கறந்து விடுகின்றன.

ஒரு சாதாரண கீறலை சரிசெய்வதற்காக அபரிமிதமான தொகையை வசூலிக்கும் கார் ஒர்க ஷாப்பில் இருந்து மாதாந்திர டாப்-அப் போடுவதற்கு கிட்டத்தட்ட இருமடங்காக கட்டணம் வசூலிக்கும் மொபைல் ஃபோன் கடை வரை, வாழ்நாள் முழுவதும் அறிந்தவர்கள் அவர்களுக்கு சேவை செய்கிறோம் என்ற போர்வையில் பணத்தை சுரண்டுவதை காண முடிகிறது.

இந்த சூழ்நிலையில் முதியவர்களுக்கு அடிப்படை டிஜிட்டல் கல்வியறிவு என்பது அதிக முக்கியத்துவம் பெறுகிறது..

வயது வந்தோருக்கான கல்வியறிவுத் திட்டம் மற்றும் தொழில்நுட்ப கல்வியறிவுத் திட்டத்தின் சிறந்த வெற்றியின் மூலம் உலகைக் கவர்ந்த ஒரு நாட்டில், அடிப்படை டிஜிட்டல் திறன்களுடன் நாட்டின் மூத்த குடிமக்களை மேம்படுத்துவது ஒரு கடினமான பணியாக இருக்காது.

மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் எப்பொழுதும் பங்காற்றியிருக்கும் இளம் தன்னார்வலர்களின் உதவியை இந்த பணிக்காக அரசு பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 Jun 2022 11:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  3. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  4. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  5. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  6. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  7. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  9. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  10. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!