மூதாட்டியிடம் 'உம்மா' கேட்ட வாலிபர் கைது

மூதாட்டியிடம் முத்தம் கேட்ட வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மூதாட்டியிடம் உம்மா கேட்ட வாலிபர் கைது
X

சேலம், ஓமலுார் பகுதியில், மூதாட்டியிடம் முத்தம் கேட்டு, தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மோரூர் பகுதியை சேர்ந்தவர் மாதையன். கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த சாந்தா என்ற மூதாட்டியிடம் முத்தம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, அவரிடம் சண்டை போட்டுள்ளார். ஆனால், முத்தம் கிடைக்காத விரக்தியில் மதுபோதையில் இருந்த மாதையன், அருகில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து மூதாட்டியை சரமாரியாக தாக்கினார்.

அடி தாங்காமல் அலறிய மூதாட்டியை, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்டனர். பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வழக்குப் பதிவு செய்த தீவட்டிப்பட்டி காவல்துறையினர் மாதையனை கைது செய்தனர். போதையில் இருந்ததால் தவறாக நடந்து கொண்டதாகவும், தன்னை மன்னித்து விடுமாறும் மாதையன் கேட்டுள்ளார். ஆனால், மாதையன் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.


Updated On: 2022-08-06T18:58:38+05:30

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நிறைவு விழா
 2. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் விரைவில் ஏற்றுமதி அபிவிருத்தி மையம்: அமைச்சர்...
 3. குமாரபாளையம்
  அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, ஸ்பீக்கர் செட் வழங்கும் விழா
 4. கடையநல்லூர்
  சாம்பவர்வடகரை இந்து கோவிலில் இஸ்லாமியரின் அன்னதானம்
 5. இந்தியா
  சுதந்திர தினம் 2022 இந்தியா புதிய திசையில் செல்லும் வரலாற்று நாள்:...
 6. இந்தியா
  செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்
 7. காஞ்சிபுரம்
  தமிழகத்தில் 13 மாவட்டங்களில் விரைவில் அரிசி அரவை ஆலைகள்: அமைச்சர்...
 8. நாமக்கல்
  ஆன்லைன் மூலம் கார் விற்பனை செய்வதாக கூறி ரூ. 2.46 லட்சம் மோசடி
 9. ஈரோடு
  ஈரோட்டில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளையடித்த 2 பேர் கைது
 10. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி, பழங்கள் விலை நிலவரம்