/* */

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்ட 3 முக்கிய கோப்புகள் விவரம்..

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

HIGHLIGHTS

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்ட 3 முக்கிய கோப்புகள் விவரம்..
X

அமைச்சராக பொறுப்பேற்றதும் கோப்புகளில் கையெழுத்திட்ட உயதநிதி ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


பின்னர், தலைமைச் செயலகத்திற்கு சென்ற அவர், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, தமிழ்நாட்டு பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும், விளையாட்டு வீரர்களின் நலனிற்காகவும் மூன்று முக்கிய கோப்புகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையொப்பமிட்டார். அதன் விவரம் வருமாறு:

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி:

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவின் போது, "ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகிய இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடத்தப்படும் என்று அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் 2022-23 ஆம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், தமிழகத்தின் தொன்மையான பாரம்பரிய விளையாட்டுகளான கபடி மற்றும் சிலம்பாட்டத்தினைச் சேர்த்திடும் கோப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை ரூ. 47.04 கோடி செலவில் நடத்திடவும், அந்தப் போட்டிகளை சிறப்பாக நடத்திட மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் குழு ஆகிய குழுக்களை அமைத்திடவும் கோப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம்:

நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ், கபடி விளையாட்டு வீரர்களான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாபர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர், வலுதூக்கும் வீரர்களான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்சடையன், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகநாதன், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த குத்தாலிங்கம், பளுதூக்கும் வீரரான திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூப்பந்து விளையாட்டு வீரர் கலீல் ரகுமான், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர் சிவராஜன் ஆகிய 9 விளையாட்டு வீரர்களுக்கு 1.3.2022 முதல் 1.8.2022 வரை மாதம் ரூ. 3000 ஓய்வூதியம் வழங்குவதற்கும், 2.8.2022 முதல் ஆயுட்காலம் வரை மாதம் ரூ. 6000 ஓய்வூதியம் வழங்குவதற்கான கோப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையொப்பமிட்டார்.

துப்பாக்கிச்சுடும் வீராங்கனைக்கு ஊக்கத்தொகை:

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில், பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 25 மீட்டர் பெண்களுக்கான தனிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிவேதிதாவுக்கு 4 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்தத் தொகைக்கான காசோலையை நிவேதிதாவிடம் வழங்கினார்.

நிகழ்வின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 16 Dec 2022 5:37 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...